Published : Aug 24, 2024, 04:33 PM ISTUpdated : Aug 24, 2024, 04:40 PM IST
ஹாக்கி, கால்பந்து போன்ற மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட் விளையாட்டுக்கு உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்திய அணி விளையாடும் போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கும் நிலையில், சில தோல்விகள் ரசிகர்களை கண்ணீர் வரவழைத்துள்ளன.
ஹாக்கி, கால்பந்து என்று எந்த விளையாட்டுக்கும் இல்லாத ரசிகர்கள் கிரிக்கெட்டுக்கு உண்டு. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மற்ற விளையாட்டுகளை விட கிரிக்கெட் விளையாடவே விரும்புகிறார்கள். கிரிக்கெட்டில் கபில் தேவ் முதல் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா என்று வீரர்கள் பிரபலமடைந்துள்ளனர்.
26
IND vs NZ
இவர்களுக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட் மூலமாக கோடீஸ்வரர்களான கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி ஆகியோரை சொல்லலாம். இந்தியா விளையாடும் போட்டி என்றால் அதில் இந்தியா தான் ஜெயிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவார்கள்.
36
MS Dhoni Run Out
இது சாதாரண ஒரு நாள் போட்டிக்கு மட்டுமின்றி உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்று எல்லாவற்றிற்கும் பொருந்தும். அப்படிப்பட்ட போட்டிகளில் இந்தியா தோற்று ரசிகர்களுக்கு கண்ணீர் வரவழைத்த போட்டிகள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
46
IND vs NZ 2019 World Cup Semi Finals
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது. கேஎல் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோ வரிசையாக ஒரு ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்த போட்டியில் தோனி 50 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். இது தான் தோனியின் கடைசி ஒருநாள் போட்டி என்பது அப்போது யாருக்கும் தெரியாது.
56
Dhoni Run Out
நியூசிலாந்திற்கு எதிரான இந்தப் போட்டியில் தான் தோனி கடைசியாக விளையாடினார். இதுதான் தோனி 350ஆவது ஒருநாள் போட்டி. இந்தப் போட்டிக்கு பிறகு எந்த ஒரு நாள் போட்டியிலும் விளையாடாத தோனி 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
66
2023 ODI World Cup
இதே போன்று ஒரு சம்பவம் தான் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் போட்டி முதல் அரையிறுதி போட்டி வரையில் விளையாடிய எல்லா போட்டியிலும் சிறப்பான பங்களிப்பை அளித்து இறுதியாக இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது வீரர்களை மட்டுமின்றி ரசிகர்களையும் அழ வைத்தது.