IPL 2025: 150க்கும் அதிகமான பிளேயர்ஸ் மாற்றி மாற்றி பயன்படுத்தியும் ஒரு யூஸூம் இல்ல – கதறிய ஐபிஎல் அணிகள்!

First Published | Aug 24, 2024, 12:47 PM IST

ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற அணிகள் மும்பை மற்றும் சென்னை. ஆனால் ஆர்சிபி, டெல்லி, பஞ்சாப் அணிகள் இதுவரை கோப்பையை வென்றதில்லை.

Indian Premier League (IPL)

கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் ஒரு கிரிக்கெட் போட்டியாக ஐபிஎல் போட்டி பார்க்கப்படுகிறது. இதனை பணக்கார கிரிக்கெட் என்று கூட சொல்லலாம். இந்த தொடரில் பங்கேற்பது என்பது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கிறது. ஏனென்றால் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி கொடுக்கும் என்பதற்காகத்தான். ஐபிஎல் தொடரில் விளையாடிய எந்த வீரரும் நஷ்டம் அடைந்ததாக இதுவரையில் சரித்திரம் இல்லை. அந்தளவிற்கு லட்சாதிபதியாகத்தான் இருந்திருக்கிறார்கள்

IPL Winners List

ஐபிஎல் தொடரில் அதிக முறை டிராபியை கைப்பற்றிய அணிகளின் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 5 முறை கைப்பற்றி முதலிடத்தில் இருக்கின்றன. 2ஆவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 முறை டிராபியை வென்றிருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை மட்டுமே டிராபியை கைப்பற்றியுள்ளன.

Tap to resize

IPL 2025

ஆனால், ஐபிஎல் சீசன் தொடங்கியதிலிருந்து இதுவரையில் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றாத அணிகளின் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நம்பர் 1 இடத்தில் உள்ளது. 2ஆவது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், 3ஆவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இடம் பெற்றுள்ளன.

Royal Challengers Bengaluru

ஐபிஎல் தொடரில் அதிக பலம் வாய்ந்த அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஒன்று. விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ், தினேஷ் கார்த்திக், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் க்ரீன் என்று மாஸான பிளேயர்ஸ் இருந்தும் ஆர்சிபி டிராபியை கைப்பற்றவில்லை. இதுவரையில் 165 பிளேயர்ஸை அணியில் மாற்றி மாற்றி பயன்படுத்தியும் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை. இதற்கு முக்கிய காரணம், ஓவர் சீன், அணியில் ஒற்றுமையின்மை என்று கூட சொல்லலாம்.

Delhi Capitals

2ஆவது இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி உள்ளது. இதுவரையில் 159 பிளேயர்ஸை மாற்றியுள்ளது. ஆனால், ஒரு முறை கூட டிராபி அடிக்கவில்லை. இதற்கு அணியில் ஒருங்கிணைப்பு இல்லாதது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

Punjab Kings

இதற்கு அடுத்ததாக கடைசி இடத்தில் இருப்பது பஞ்சாப் கிங்ஸ் தான். இதுவரையில் 156 பிளேயர்ஸை மாற்றியதோடு மட்டுமல்லாமல் 10 கேப்டன்களையும் மாற்றியிருக்கிறது. ஆனால், என்ன, பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியவில்லை. இதற்கு அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் இல்லாதது தான் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

Latest Videos

click me!