2 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட ஷிகர் தவான் – நாட்டிற்காக விளையாடியது பெருமை – ஓய்வு அறிவித்த ஷிகர் தவான்!

First Published | Aug 24, 2024, 9:55 AM IST

இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடிய தவான், 167 ஒருநாள் போட்டிகளில் 6793 ரன்கள் குவித்துள்ளார்.

Shikhar Dhawan

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் வீடியோ மூலமாக அறிவித்துள்ளார். நாட்டிற்காக விளையாடியதை பெருமையாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார். கடந்த 195 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி டெல்லியில் பிறந்தவர் ஷிகர் தவான்.

Shikhar Dhawan Retirement

கிரிக்கெட் மீதான ஆர்வத்தால் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஷிகர் தவான் கடைசியாக 2022 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

Tap to resize

International and Domestic Cricket

அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதுவரையில் 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான் 6793 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 17 சதங்களும், 39 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 143 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான தவான் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடினார்.

Shikhar Dhawan

இதுவரையில் 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷிகர் தவான், 2315 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 7 சதங்களும், 5அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 190 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமான ஷிகர் தவான் கடைசியாக 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடினார்.

Shikhar Dhawan Retirement Video

இதுவரையில் 68 டி20 போட்டிகளில் விளையாடி 1759 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. மொத்தமாக 11 அரைசதங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 92 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டிற்கு பிறகு ஷிகர் தவானுக்கு போதுமான வாய்ப்புகள் இந்திய அணியில் வழங்கப்படவில்லை. கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Shikhar Dhawan Retirement

அதில் அவர் கூறியிருப்பதாவது: நாட்டிற்காக விளையாடியதை பெருமையாக கருதுகிறேன். இதுவரை தன் மீது காட்டிய அன்புக்கு நன்றி என்று கூறியுள்ளார். சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தவான் ஐபில் தொடர்களில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Shikhar Dhawan Cricket Career

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தவான் மொத்தமாக 152 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். வரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஏலத்திற்கு முன்பாக பஞ்சாப் கிங்ஸ் அவரை விடுவித்தால், எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுப்பதற்கு முன் வராது.

Shikhar Dhawan

ஏனென்றால், தொடர்ந்து தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வந்துள்ளார். அதோடு தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வும் அறிவித்துள்ளார். இந்த நிலையில் தான் பஞ்சாப் கிங்ஸ் அவரை தக்க வைக்குமா அல்லது விடுவிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Latest Videos

click me!