ஒருநாள் போட்டிகளில் சிறந்த இந்திய பந்துவீச்சாளர்கள் யார்? டாப் 5 இந்திய பவுலர்கள்!

First Published | Aug 14, 2024, 4:40 PM IST

ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா, ஸ்டூவர்ட் பின்னி மற்றும் அனில் கும்ப்ளே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சு வலிமை குறித்தும், சமீபத்திய போட்டிகளில் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் இந்த பதிவில் காண்போம்.

Indian Bowlers

ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பவுலர்களின் பட்டியலில் முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா, ஸ்டூவர்ட் பின்னி, அனில் கும்ப்ளே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஒருநாள் போட்டிகளில் மாஸாக பந்து வீசி அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களின் சிறந்த பந்து வீச்சு பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க…

Indian Bowlers

அனில் கும்ப்ளே, ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, அஜித் அகர்கர், ஜவஹ ஸ்ரீநாத், ஸ்டூவர்ட் பின்னி என்று மாஸான வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியிருக்கின்றனர். தற்போது முகமது சிராஜ், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது ஆகியோர் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.

Tap to resize

Indian Bowlers

இவர்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசிய பவுலர்களின் பட்டியலில் முகமது சிராஜ் இடம் பெற்றுள்ளார். இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு முகமது சிராஜ் முக்கிய காரணமாக இருந்தார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. இதில், முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

Mohammed Siraj Best - 216

இதே போன்று அடுத்த ஓவரில் ஒரு ரன் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். இதன் மூலமாக 5 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்தார். இந்த போட்டியில் 7 ஓவர்கள் வீசிய சிராஜ் ஒரு மெய்டன் உள்பட 21 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் எடுத்தார். இதன் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் 4ஆவது இடம் பிடித்தார்.

Ashish Nehra Best- 236

ஆஷிஷ் நெஹ்ரா – 23/6 (இங்கிலாந்து - 2003)

டர்பனில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா 23 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெஹ்ரா ஆட்டநாயகன் விருது வென்றார்.

Jasprit Bumrah Best 196

ஜஸ்ப்ரித் பும்ரா – 19/6 (இங்கிலாந்து - 2022)

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் பும்ரா சிறப்பாக பந்து வீசி 19 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் மூலமாக இங்கிலாந்து 110 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Anil Kumble Best 126

அனில் கும்ப்ளே – 12/6 (வெஸ்ட் இண்டீஸ் - 1993)

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹீரோ கப் இறுதிப் போட்டியில் சுழல் சக்கரவர்த்தியான அனில் கும்ப்ளே 12 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் எடுத்தார்.

Stuart Binny - Best 46

ஸ்டூவர்ட் பின்னி – 4/6 (வங்கதேசம் - 2014)

இப்படி ஒரு லக் யாருக்கும் இருந்திருக்காது. ஒரு ஆல்ரவுண்டரான ஸ்டூவர்ட் பின்னி வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

Latest Videos

click me!