ஹர்திக் பாண்டியாவின் புதிய காதல் கிசுகிசு!

Published : Aug 14, 2024, 02:03 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, நடாஷா ஸ்டான்கோவிச்சுடனான திருமண முறிவுக்குப் பிறகு, பாடகி ஜாஸ்மின் வாலியாவுடன் புதிய காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். ஊர்வசி ரவுடேலா, எல்லி அவ்ராம் போன்ற நடிகைகளுடன் முன்னர் கிசுகிசுக்கப்பட்ட பாண்டியா, தற்போது ஜாஸ்மின் வாலியாவுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

PREV
15
ஹர்திக் பாண்டியாவின் புதிய காதல் கிசுகிசு!
Hardik Pandya natasa stankovic

ஹர்திக் பாண்டியா திருமணத்திற்கு முன்னதாக பாலிவுட் நடிகைகளான ஊர்வசி ரவுடேலா மற்றும் எல்லி அவ்ராம் ஆகியோருடன் கிசுகிசுவில் இருந்த நிலையில் திருமண முறிவுக்கு பிறகு தற்போது ஜாஸ்மின் வாலியா உடன் கிசுகிசுவில் சிக்கியுள்ளார்.

25
Hardik Pandya life after divorce

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா கடந்த 2020 ஆம் ஆண்டு செர்பியா நடிகையான நடாஷா ஸ்டான்கோவிச்சை காதல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து அகஸ்தியா பிறந்தான். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு பாண்டியா மற்றும் நடாஷா இருவரும் பரஸ்பரமாக பிரிந்த நிலையில் இங்கிலாந்து பாடகியான ஜாஸ்மின் வாலியா உடன் கிசுகிசுவில் சிக்கியுள்ளார்.

35
Hardik Pandya natasa Stankovic divorce

நடாஷாவை திருமணம் செய்வதற்கு முன்னதாக, பாலிவுட் நடிகைகளான ஊர்வசி ரவுடேலா மற்றும் எல்லி அவ்ராம் ஆகியோருடன் கிசுகிசுவில் சிக்கினார். அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவரும் மும்பையில் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசியுள்ளனர். இதையடுத்து ஒருவரும் லிவிங் டூகெதரில் இருந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர். இவர்களுக்கு அகஸ்தியா பிறந்தான்.

45
Jasmin Walia Hardik Pandya relationship

பின்னர், 2023 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிச் இருவரும் திருமணம் செய்தனர். இந்த நிலையில் 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் பரஸ்பர சமரசமாக பேசி பிரிந்தனர். இதையடுத்து, தனது மகன் அகஸ்தியாவை கூட்டிக்கொண்டு நடாஷா செர்பியா பறந்தார்.

55
Jasmin Walia Hardik Pandya vacation

அவர் பிரிந்து சென்று ஒரு மாதமான நிலையில் ஹர்திக் பாண்டியா இங்கிலாந்து பாடகியான ஜாஸ்மின் வாலியா உடன் கிசுகிசுவில் சிக்கியுள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் பற்றுவதும், தங்களது புகைப்படங்களுக்கு லைக்ஸ் கொடுப்பதும் என்று இருவரும் இருந்து வந்துள்ள நிலையில் இந்த கிசுகிசு வெளியாகியுள்ளது. அதோடு இருவரும் கிரீஸ் நாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories