முதல் டி20யில் வங்கதேசத்தை வச்சி செஞ்ச இந்தியா: 12 ஓவர்களில் ஆட்டம் குளோஸ் - இந்தியா அபார வெற்றி

First Published | Oct 6, 2024, 11:06 PM IST

வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 11.5 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Team India

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்தேசம் கிரிக்கெட் அணி ஏற்கனவே டெஸ்ட் தொடரை 0 - 2 என்ற கணக்கில் இழந்த நிலையில் இரு அணிகள் இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன் குவாலியரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியாவின் இளம் வீரர்களான மயங்க் யாதவ் மற்றும் ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி இருவரும் தங்களது முதல் சர்வதேச போட்டியில் களம் இறங்கினர்.

Team India

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் வங்கதேசத்தை பேட்டிங் செய்ய பணித்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. முதல் 3 ஓவர்களிலேயே அந்த அணியின் 2 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இருவரையும் அர்ஷ்தீப் சிங் வெளியேற்றினார். தனது முதல் சர்வதேச போட்டியில் களம் இறங்கிய மயங்க் யாதவ் தனது முதல் ஓவரை மெய்டனாக வீசி அசத்தினார்.

Latest Videos


Team India

வருண் சக்கரவர்த்தி தனது பங்கிற்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய நிலையில் அந்த அணி 19.5 ஓவர்கள் முடிவில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 128 என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஜோடி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. இந்தியா முதல் 6 ஓவர்களிலேயே 71 ரன்களை குவித்து வலுவான அடித்தளம் அமைத்தது.

Hardik Pandiya

அதன் பின்னர் மைதானத்திற்கு வந்த ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு அதிரடி காட்டி 2 சிக்சர்கள், 5 பவுண்டரிகளைப் பறக்கவிட்டார். இதனால் இந்திய 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் இடையேயான இரண்டாவது போட்டி வருகின் 9ம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.

click me!