India vs West Indies 1st Test: இந்தியா முதலில் பவுலிங்.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்!

Published : Oct 02, 2025, 10:11 AM IST

India vs West Indies 1st Test: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பவுலிங் செய்கிறது. இரு அணிகளின் பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.

PREV
14
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது போட்டி குஜராத் அகமதாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடர், தற்போது நடைபெற்று வரும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025-27 சுற்றின் ஒரு பகுதியாகும்.

24
இந்தியா முதலில் பவுலிங்

WTC-யில் இந்திய அணிக்கு இது முதல் டெஸ்ட் தொடராகும். இந்திய அணியில் ஐஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், ஆனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ரவீந்திர ஜடேஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பி இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நம்பிக்கை

டாஸ் வென்ற பிறகு ரோஸ்டன் சேஸ் கூறுகையில், "நாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போகிறோம். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாகத் தெரிகிறது. சிறிது ஈரப்பதம் இருக்கும். முதல் சில மணிநேரங்களை நாங்கள் சமாளிக்க வேண்டும். இது ஒரு இளம் அணி, நாங்கள் வெளியே வந்து நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். நாங்கள் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஆல்ரவுண்டருடன் களமிறங்கியுள்ளோம்" என்றார்.

34
சுப்மன் கில் சொன்னது என்ன?

டாஸ் போடும்போது, இந்திய கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், "இந்த ஆண்டு இறுதிக்குள் எங்களுக்கு சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகள் உள்ளன, நான்கிலும் வெற்றி பெற விரும்புகிறோம். அணி நன்றாக உள்ளது. அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். இது ஒரு நல்ல ஆடுகளமாகத் தெரிகிறது. டாஸ் இழந்ததில் ஏமாற்றம் இல்லை,.

ஆடுகளம் மூடப்பட்டிருந்ததால் ஆரம்பத்தில் பந்துவீச்சுக்கு சிறிது சாதகமாக இருக்கலாம். எங்களிடம் பும்ரா மற்றும் சிராஜ் என இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், ஜடேஜா, வாஷிங்டன் மற்றும் குல்தீப் என மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள், மற்றும் ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி ஆகியோர் உள்ளனர்" என்று தெரிவித்தனர்.

44
இரு அணிகளின் பிளேயிங் லெவன்

இந்திய அணி பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்: ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), டேகனரைன் சந்தர்பால், ஜான் கேம்ப்பெல், அலிக் அதானேஸ், பிராண்டன் கிங், ஷாய் ஹோப், ஜஸ்டின் கிரேவ்ஸ், ஜோமல் வாரிக்கன், கேரி பியர், ஜோஹன் லேன், ஜேடன் சீல்ஸ்.

Read more Photos on
click me!

Recommended Stories