India vs Netherlands: இந்தியா பேட்டிங்.. பிளேயிங் லெவனில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்! அதிரடி வீரருக்கு ஓய்வு!

Published : Feb 18, 2026, 06:58 PM IST

டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. பிளேயிங் லெவனில் பெரும் ட்விஸ்ட்டாக ஆல்ரவுண்டர் இடம்பெறவில்லை. தமிழக வீரர் சேர்க்கப்பட்டுள்ளார்.

PREV
14
இந்தியா, நெதர்லாந்து போட்டி

டி20 உலகக்கோப்பையில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் இடையிலான போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார். இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

24
குல்தீப் யாதவ் நீக்கம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இடம்பெற்றிருந்த குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயத்தில் இருந்து குணமடைந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ளார். இதேபோல் ஆல்ரவுண்டர் அக்சர் படேலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

 அவருக்கு பதிலாக பாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் இடம்பெற்றுள்ளார். பாஸ்ட் பவுலர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் பும்ரா இன்றைய போட்டியில் விளையாடுகிறார்.

34
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன்

மற்றபடி இந்திய அணியில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. அபிஷேக் சர்மாவும், இஷான் கிஷனும் ஒப்பனிங்கில் விளையாடுகிறார்கள். திலக் வர்மா 3வது வரிசையிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 4வது வரிசையிலும் களமிறங்குவார்கள். இதனைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே பேட்டிங் செய்ய உள்ளனர்.

44
இந்திய அணி பிளேயிங் லெவன்

பவுலிங்கை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ராவுடன், அர்ஷ்தீப் சிங கைகொடுக்க உள்ளார். ஹர்திக் பாண்ட்யாவும் பந்துவீசுவார். ஸ்பின் பவுலிங்கில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். 

நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி.

Read more Photos on
click me!

Recommended Stories