டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் வரும் 5ம் தேதி மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் இங்கிலாந்துடன் வரும் 5ம் தேதி இந்தியா மோதுகிறது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
24
அபிஷேக் சர்மா அதிரடி நீக்கம்
இந்திய அணியின் தொடக்க அதிரடி வீரர் அபிஷேக் சர்மா தொடர்ந்து சொதப்பி வருகிறார். 3 போட்டிகளில் டக் அவுட் ஆன அவர் இந்த தொடரில் இதுவரை மொத்தமாக 80 ரன்களை கூட தாண்டவில்லை. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முக்கியமான போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியதுடன், பீல்டிங்கிலும் 2 கேட்ச்களை விட்டு சொதப்பினார்.
இதனால் அபிஷேக் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக அதிரடி வீரர் ரிங்கு சிங் உள்ளே வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மேட்ச் வின்னிங் ஆடிய சஞ்சு சாம்சனுடன் இஷான் கிஷன் ஓப்பனிங்கில் களமிறங்குகிறார்.
34
சூர்யகுமார், திலக் வர்மா
மற்றபடி இந்திய அணியில் வேறு மாற்றம் ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் கேப்டன்சியில் அசத்தினாலும் பேட்டிங்கில் சரிவர செயல்படவில்லை. எனவே அவர் பார்முக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மூன்றாவது இடத்தில் ஆடிய திலக், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஐந்தாவது இடத்தில் ஆடி 15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இந்த இடமாற்றம் பலனளித்ததால், அவர் ஐந்தாவது இடத்திலேயே தொடர்வார்.
சூப்பர் 8 சுற்றின் முதல் இரண்டு போட்டிகளில் வருண் சக்கரவர்த்தியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஃபார்முக்கு திரும்பும் அறிகுறி தெரிந்தது. குல்தீப் யாதவ் இருந்தாலும், வருண் பந்துவீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஏற்கெனவே தடுமாறி இருப்பதால் அவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.