ரிங்கு சிங் இருந்தும் சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு? பிசிசிஐ-யின் ரகசிய பிளான் அம்பலம்!

Published : Mar 02, 2026, 11:09 PM IST

Sanju Samson vs Rinku Singh Selection Debate: டி20 உலகக் கோப்பையில் கிடைத்த வாய்ப்பை சஞ்சு சாம்சன் சரியாக பயன்படுத்தவில்லை. வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கு ரிங்கு இருந்தும் சஞ்சு ஏன் தொடர்ந்தார் தெரியுமா? 

PREV
16
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய சஞ்சு சாம்சன்

டி20 உலகக்கோப்பை 2026 சூப்பர்-8 சுற்றில், ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டம் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

26
ரிங்கு சிங்கை விட சஞ்சுவுக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்பட்டது?

தந்தை மறைவால் ரிங்கு சிங் விலக, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் சரியாக ஆடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கு ரிங்கு வந்ததும் சஞ்சு நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

36
ஓப்பனிங் ரெக்கார்டு..

சஞ்சு சாம்சன் பவர்பிளேயில் அதிரடியாக ஆடக்கூடியவர். இந்த உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிராக 8 பந்துகளில் 22 ரன்களும், ஜிம்பாப்வேக்கு எதிராக 15 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தார்.

46
சூப்பர் விக்கெட் கீப்பர்..

சஞ்சுவின் விக்கெட் கீப்பிங் திறமை அணிக்கு கூடுதல் பலம். ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஒரு அற்புதமான டைவிங் கேட்ச் பிடித்தார். இஷான் கிஷனை விட சிறந்த கீப்பிங் ரெக்கார்டு சஞ்சுவுக்கு உள்ளது.

56
ஈடன் கார்டன் கிங் சஞ்சு...

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் சஞ்சு சாம்சனுக்கு நல்ல ரெக்கார்டு உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் போட்டிக்கு முன், இங்கு 11 இன்னிங்ஸ்களில் 332 ரன்கள் அடித்துள்ளார். இதுவும் அவருக்கு வாய்ப்பு கிடைக்க ஒரு காரணம்.

66
சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சஞ்சுவின் ரெக்கார்டு..

இடது கை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சஞ்சு சாம்சனுக்கு சிறந்த ரெக்கார்டு உள்ளது. அவர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள சஞ்சு சரியான தேர்வாக கருதப்பட்டார். இதுவும் அவருக்கு வாய்ப்பு கிடைக்க உதவியது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories