இந்தியா, இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், போட்டி நடக்கும் இடத்தில் வானிலை நிலவரம், பிட்ச் ரிப்போர்ட் குறித்து பார்ப்போம்.
IND vs ENG 4th Test Likely To Be Affected By Rain?
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. லார்ட்ஸில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நாளை இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
24
4வது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்
இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம். ஆனால் இந்தியா தொடரில் வெற்றி பெறவோ அல்லது டிரா செய்யவோ இந்த போட்டியில் வெல்வது கட்டாயம் ஆகும். இதனால் இரு அணிகளும் தீவிர எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில், 4வது டெஸ்ட் போட்டி நடக்கும் 5 நாளும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.மான்செஸ்டரில் போட்டி நடைபெறும் 5 நாட்களுமே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையங்கள் கணித்துள்ளன.
34
மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு
குறிப்பாக முதல் மூன்று நாட்களில் கனமழைக்கு அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக போட்டி பெரிதும் பாதிக்கப்படலாம் என்றும் ஆட்டம் டிராவில் முடிவதற்கும் அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
போட்டி நடைபெறும் நாட்களில், காலை முதல் மாலை வரை லேசான மழை அல்லது தூரல் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆட்டத்தை அடிக்கடி பாதிக்கக்கூடும். ஐந்து நாட்களுமே மழைக்கான வாய்ப்பு இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி டிராவில் முடியவே அதிக வாய்ப்புகள் உள்ளன.
4வது டெஸ்ட் போட்டி நடக்கும் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். மழை மற்றும் மேகமூட்டமான வானிலை காரணமாக பாஸ்ட் பவுலர்களுக்கு சீம் மூவ்மென்ட் மற்றும் ஸ்விங் கிடைக்கும். இந்த மைதானம் ஒரு காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமான ஆடுகளமாக இருந்தது. ஆனால், சமீப காலங்களில் இந்த ஆடுகளம் சற்று மெதுவாக மாறியுள்ளது.
ஸ்பின் பவுலர்களுக்கு கைகொடுக்குமா?
பாஸ்ட் பவுலர்கள் சீரான லென்த் மற்றும் லைனில் பந்துவீசினால் விக்கெட்டுகளை வீழ்த்த அதிக வாய்ப்பு உள்ளது.ஈரப்பதம் மற்றும் மழையின் காரணமாக பேட்ஸ்மேன்கள் தொடக்கத்தில் ரன்களை குவிப்பது சவாலாக இருக்கலாம். புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிப்பது முக்கியம். 3வது நாள் முதல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் ஓரளவு இந்த பிட்ச் கைகொடுக்கும்.