IND vs BAN Test:சென்னை டெஸ்ட் போட்டிக்கு கவுண்டர் டிக்கெட் கிடைக்குமா? ஆன்லைன் டிக்கெட் ரூ.15,000க்கு விற்பனை!

Published : Sep 18, 2024, 02:15 PM IST

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. பாகிஸ்தானை வீழ்த்திய உத்வேகத்துடன் வங்கதேசம் களமிறங்கும் நிலையில், இந்திய அணி புதிய சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

PREV
16
IND vs BAN Test:சென்னை டெஸ்ட் போட்டிக்கு கவுண்டர் டிக்கெட் கிடைக்குமா? ஆன்லைன் டிக்கெட் ரூ.15,000க்கு விற்பனை!
IND vs BAN Test

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலையானது அதிகபட்சமாக ரூ.15,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டி டிக்கெட் கட்டணத்தைவிட அதிகமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்று வீழ்த்தியதோடு வரலாற்று சாதனை படைத்த கையோடு இந்தியாவில் கால் பதிக்கிறது வங்கதேசம்.

பாகிஸ்தானைப் போன்று இந்தியாவிலும் வரலாற்று சாதனை படைப்போம் என்ற நம்பிக்கையோடு வங்கதேசம் சென்னையில் கால் பதித்திருக்கிறது. ஆனால், இதுவரையில் இரு அணிகளும் மோதிய 13 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வங்கதேசம் வெற்றி பெற்றதில்லை. 11 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. 2 போட்டி டிராவில் முடிந்துள்ளது.

26
India vs Bangladesh 1st Test

தற்போது பாகிஸ்தானை வீழ்த்திய பலத்தோடு பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் பலம் வாய்ந்த அணியாக வங்கதேசம் இந்தியா வந்திருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா விளையாடிய 34 போட்டிகளில் 15 வெற்றியும், 7 தோல்வியும் அடைந்துள்ளது. 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டி டை செய்யப்பட்டுள்ளது. கடைசியாக இங்கிலாந்திற்கு எதிராக விளையாடிய இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

36
Ind vs Ban Test

இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 759/7 ரன்கள் ஆகும். 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா அதிகபட்சமாக 759 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதற்கு முன்னதாக 1977 ஆம் ஆண்டு ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான சாதனை படைத்தது.

சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக சுனில் கவாஸ்கர் விளையாடிய 12 போட்டிகளில் 1018 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 236* ரன்கள் எடுத்தார். இதே போன்று சச்சின் டெண்டுல்கர் விளையாடிய 10 போட்டிகளில் 970 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக 165 ரன்கள் எடுத்தார். இதே போன்று பந்து வீச்சில் அனில் கும்ப்ளே விளையாடிய 8 போட்டிகளில் 48 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

46
IND vs BAN Test

ஹர்பஜன் சிங் 7 போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த நிலையில் தான் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. இந்த மைதானம் இந்தியாவிற்கு சாதகமான மைதானம் என்பதால் இந்திய அணி வெற்றி பெற்று புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தோல்வியை விட அதிக வெற்றிகள் பெற்ற 4ஆவது அணி என்ற சாதனையை இந்தியா படைக்கும்.

இதுவரையில் 1932 ஆம் ஆண்டு முதல் இந்தியா விளையாடிய 579 போட்டிகளில் 178 வெற்றி, 178 தோல்விகளை தழுவியதோடு 222 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் பெறும் வெற்றி உள்பட 5 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் டெஸ்ட் வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற 3ஆவது அணியாக இந்தியா சாதனை படைக்கும்.

56
IND vs BAN 1st Test

நாளை (19 ஆம் தேதி) காலை 9.30 மணிக்கு தொடங்கும் சென்னை டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதே போன்று 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 27ஆம் தேதி கான்பூரில் தொடங்கிறது. சென்னை டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலையானது ரூ.1000 முதல் தொடங்கி ரூ.15,000 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கவுண்டரில் கிடைக்குமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

ரூ.1000ல் தொடங்கும் டிக்கெட் விலையானது, ரூ.1250, ரூ.2000, ரூ.5000, ரூ.10,000 மற்றும் ரூ.15,000 என்று டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்சைடர் வெப்சைட் மற்றும் ஆப் மூலமாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இந்த போட்டியானது ஜியோ சினிமாவில் நேரடியாக லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது. மேலும், ஸ்போர்ட்ஸ் 18-1 மற்றும் 2 சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

66
IND vs BAN Test Series

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்ப்ர), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், யாஷ் தயாள்.

வங்கதேசம்:

நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (கேப்டன்), ஷாகீப் அல் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகீர் ஹசன், ஷத்மன் இஸ்லாம், மெஹிடி ஹசன் மிராஸ், மஹிமுல் ஹக், முஷிபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), லிட்டன் குமார் தாஸ் (விக்கெட் கீப்பர்), தைஜூல் இஸ்லாம், நயீம் ஹசன், ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, நஹித் ராணா, சையது கலீத் அகமது, ஜாகெர் அலி அனிக்

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories