MS Dhoni, CSK: சிஎஸ்கே முதலில் ஏலம் எடுக்க நினைத்தது தோனியை இல்லையாம்; அவர் ஒரு அதிரடி வீரர்? யார் தெரியுமா?

First Published | Sep 18, 2024, 12:33 PM IST

MS Dhoni and Virender Sehwag: ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சிஎஸ்கே தோனியை அல்லாமல் வேறொரு வீரரைத்தான் ஏலத்தில் எடுக்க விரும்பியதாக சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியுள்ளார். அந்த வீரர் டெல்லியைச் சேர்ந்தவர் என்பதால் டெல்லிக்காக விளையாட விரும்பியதால், சிஎஸ்கே தோனியை ஏலத்தில் எடுத்ததாக பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

MS Dhoni and CSK, IPL 2025

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 17 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஐபிஎல் 2025 தொடருக்கான 18 ஆவது சீசன் தொடங்க இருக்கிறது. இதற்கான மெகா ஏலம் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க இருக்கிறது. இதில் பல மாற்றங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணியும் தங்களது அணியை பலப்படுத்த சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம்.

MS Dhoni and Virender Sehwag

மேலும், ஒவ்வொரு அணியிலும் கேப்டன்களும் மாற்றப்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதில், ஒரு முறை கூட டிராபி கைப்பற்றாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஃபாப் டூப்ளெசிஸ் விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதிய கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது. இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இத்தனை ஆண்டுகாலம் இடம் பெற்று விளையாட முக்கிய காரணமே அந்த ஒரு வீரர் தான்.

Tap to resize

CSK, MS Dhoni

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சிஎஸ்கே அந்த ஒரு வீரரைத் தான் ஏலத்தில் எடுக்க விரும்பியது. ஆனால், அவர் டெல்லியைச் சேர்ந்தவர் என்பதால், டெல்லிக்காக விளையாட ஆசைப்பட்டுள்ளார். ஆதலால், சிஎஸ்கே தோனியை 2ஆவது பட்சமாக ஏலத்தில் எடுத்தது. யார் அந்த முதல் வீரர்? எதற்காக வேண்டாம் என்றார்? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க…

ஐபிஎல் தொடரின் 17 சீசன்கள் வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ஆதிக்கம் மட்டும் அதிகளவில் இருந்துள்ளது. இந்த இரு அணிகளும் தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன.

Chennai Super Kings

அதிலேயும் குறிப்பாக சிஎஸ்கேவிற்கு தோனியும், மும்பைக்கு ரோகித்தும் டிராபி வென்று கொடுத்துள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கேயின் கேப்டனாக இருந்து வரும் தோனி 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சிஎஸ்கேயின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான சிஎஸ்கே விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்தது.

IPL 2025 Mega Auctions

இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சிஎஸ்கே தோனியை ரூ.9.5 கோடிக்கு ஏலம் எடுத்தது. அப்போது தோனி தான் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் ஆவார். அதன் பிறகு 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே விளையாட தடை விதிக்கப்பட்டது. 2022ல் சில போட்டிகள் மட்டுமே தோனி கேப்டனாக இருந்தார். ஆனால், 2024ல் சிஎஸ்கேயின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இன்னும் ஒரு சில மாதங்களில் ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசன் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சிஎஸ்கே முதலில் ஏலம் எடுக்க இருந்தது வீரேந்திர சேவாக் என்று சிஎஸ்கேயின் முன்னாள் வீரர் பத்ரிநாத் கூறியிருக்கிறார்.

Chennai Super Kings, IPL 2025

இதுகுறித்து பேசிய பத்ரிநாத் கூறியதாவது, மறைந்த வி.பி. சந்திரசேகர் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஆரம்ப காலத்தில் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். அவர்தான் என்னை அணிக்காக ஒப்பந்தம் தெய்தார். அவர்தான் மகேந்திர சிங் தோனியை தேர்வு செய்தார்" என்றார்.  

ஆனால், அதற்கு முன் வீரேந்திர சேவாக்கை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே நிர்வாகம் பரிசீலித்து வந்தது. அதை சேவாக் என்னிடம் ஒருமுறை சொன்னார். தான் சென்னை வந்து சீனிவாசனை (சிஎஸ்கே உரிமையாளர்) சந்தித்தாக என்னிடம் கூறினார். ஆனால் டெல்லி அணிக்காக விளையாட சேவாக் விரும்பினார். ஏனென்றால் அவர் டெல்லியைச் சேர்ந்தவர். அதன் பிறகு தான் சிஎஸ்கே தோனியை ஏலம் எடுத்தது என்றார்.

MS Dhoni, CSK, IPL 2025

ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக வீரேந்திர சேவாக் இருந்தார். அதன் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 2008 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் 104 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய சேவாக் 2,728 ரன்களை குவித்தார். அதில் 2 சதங்கள், 18 அரைசதங்கள் அடங்கும். மேலும், சேவாக் டெல்லி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக 53 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!