இந்தியா vs ஆஸ்திரேலியா தொடரை எந்த டி.வி.யில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம் என்ன? முழு விவரம்!

Published : Oct 16, 2025, 05:24 PM IST

India vs Australia ODI 2025: இந்தியா vs ஆஸ்திரேலியா ஓடிஐ தொடரை எந்த டி.வி.யில் பார்க்கலாம்? போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
இந்தியா vs ஆஸ்திரேலியா தொடர்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஓடிஐ போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றன. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது 50 ஓவர் ஒருநாள் போட்டி வரும் 19ம் தேதி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது ஓடிஐ வரும் 23ம் தேதி அடிலெய்டிலும், 3வது ஓடிஐ 25ம் தேதி சிட்னியிலும் நடைபெற உள்ளது.

24
ரோகித், கோலிக்கு கடைசி தொடரா?

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவன்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்கு இது கடைசி ஓடிஐ தொடராக இருக்கலாம் என்பதால் இந்த தொடரை உலகமே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளது. ஆஸ்திரேலிய ஓடிஐ தொடருக்கான இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து கழட்டி விடப்பட்டதும், அனுவபமிக்க முகமது ஷமியை அணியில் எடுக்காமல் தலைமை பயிற்சியாளர் கம்பீருக்கு விருப்பமான ஹர்சித் ராணாவை அணியில் சேர்த்ததும் பெரும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தன.

34
எந்த டிவியில் பார்க்கலாம்? நேரம் என்ன?

இந்தியா vs ஆஸ்திரேலியா ஓடிஐ போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு தொடங்கும்?

இந்தியா vs ஆஸ்திரேலியா ஓடிஐ போட்டிகள் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும். அரை மணி நேரத்துக்கு முன்பாக அதாவது காலை 8.30 மணிக்கு டாஸ் போடப்படும்.

இந்தியா-ஆஸ்திரேலிய தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்?

இந்தியா-ஆஸ்திரேலிய தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் குழும சேனல்களில் பார்க்கலாம். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் இந்த போட்டிகளை தமிழ் வர்ணனையுடன் கண்டு ரசிக்கலாம்.

இந்தியா-ஆஸ்திரேலிய தொடரை ஓடிடியில் பார்க்க முடியுமா?

ஆம்.. இந்தியா ஆஸ்திரேலிய தொடரை ஜியோ சினிமாவிலும்,  ஜியோ ஹாட்ஸ்டாரிலும் பார்க்க முடியும்.

44
இரு அணி வீரர்களின் லிஸ்ட்

இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல், துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா.

ஆஸ்திரேலிய அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனோலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மேத்யூ குஹ்னெமன், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட் மற்றும் மிட்செல் ஸ்டார்க்.

Read more Photos on
click me!

Recommended Stories