இந்தியா 400 ரன்களுக்கு ஆல் அவுட்: அக்‌ஷர், ஷமி அதிரடியால் 223 ரன்கள் முன்னிலை!

First Published Feb 11, 2023, 12:07 PM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 400 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
 

முகமது ஷமி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று நாக்பூரில் தொடங்கியது.

அக்‌ஷர் படேல்

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. அதன்படி அந்த அணியில் லபுசேஞ்ச் அதிகபட்சமாக 49 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற ஆஸ்திரேலியா 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ரவீந்திர ஜடேஜா

இதைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில், கேஎல் ராகுல் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இந்தியா 77 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் இருவரும் களத்தில் இருந்தனர். 

ரோகித் சர்மா

இதைத் தொடர்ந்து இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். அதில், அஷ்வின்(23), கோலி(12), புஜாரா(7) ஆகிய வீரர்கள் சொதப்பினர். அறிமுக வீரர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் தலா 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

அக்‌ஷர் படேல்

மறுமுனையில் நிலைத்து நின்று அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த ரோஹித் சர்மா 120 ரன்கள் அடித்தார். ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். இந்திய அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் அடித்துள்ளது. ஜடேஜா 66 ரன்களுடனும், அக்ஸர் படேல் 52 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஷமி அடுத்தடுத்து சிக்ஸ்

இருவரும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கிய நிலையில், ஜடேஜா கூடுதலாக 4 ரன்கள் சேர்த்த நிலையில் 70 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஷமி சிக்சராக விளாசினார். அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விளாசி ஆஸ்திரேலியாவை அலர விட்டார். அவர் 47 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரிகள் உள்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா 223 ரன்கள் முன்னிலை

அடுத்து சிராஜ் வந்து அக்‌ஷர் படேலுக்கு உறுதுணையாக இருந்தார். அக்‌ஷர் படேல் எதிர்பாராத விதமாக 84 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 174 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உள்பட 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா 400 ரன்கள்

இதன் மூலம் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 400 ரன்கள் குவித்து 223 ரன்கள் முன்னிலையில் உள்ளது. உணவு இடைவேளையைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா 2ஆவது இன்னிங்ஸில் ஆட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

இந்தியா

இந்தியா:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், புஜாரா, கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா: 

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், டாட் மர்ஃபி, போலந்த்.

click me!