தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023-2025) புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருந்து 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நடந்தது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் குவித்தது.
210
Virat Kohli
பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 408 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 163 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸை ஆடியது.
310
Rohit Sharma
இதில் வரிசையாக இந்திய அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். அதிகபட்சமாக விராட் கோலி 76 ரன்கள் எடுத்து கடைசியாக தனது விக்கெட்டை இழந்தார். பின் வரிசை வீரர்கள் மொத்தமாக 16 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
410
South Africa vs India Test
இறுதியாக இந்திய அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்து 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், இந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றியோடு முடித்த இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டை தோல்வியோடு முடித்துள்ளது.
510
Cricket
அதோடு, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இதுவரையில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை கைப்பற்றாத நிலையில், இந்த முறையும் அந்த வாய்ப்பை இழந்துள்ளது.
610
India vs South Africa Test
இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றாத நிலையில், அதனை இழக்காமல் இருப்பதற்கு 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கண்டிப்பான முறையில் வெற்றி பெற வேண்டும். அப்படி இல்லையென்றால், இந்த முறையும் தென் ஆப்பிரிக்கா தான் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
710
SA vs IND Test
கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து வருகிறது.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா – ஜோகன்னஸ்பர்க் – 2022 – 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
இந்தியா – தென் ஆப்பிரிக்கா – கேப் டவுன் – 2022 – 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
810
WTC Points Table
இந்தியா – இங்கிலாந்து – பிர்மிங்காம் – 2022 – 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி
இந்தியா – ஆஸ்திரேலியா – ஓவல் – 2023 – 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி
இந்தியா – தென் ஆப்பிரிக்கா – செஞ்சூரியன் – 2023 – 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி
910
World Test Championship 2023 - 2025
இந்த நிலையில், 2025 ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருந்த இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளது.
1010
South Africa vs India Test
கடந்த ஜூன் மாதம் ஓவல் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.