டி20 உலகக்கோப்பை: ஷிவம் துபே சிக்சர் மழை.. வருண் சுழல் வலை.. நெதர்லாந்தை வீழ்த்தியது இந்தியா!

Published : Feb 18, 2026, 10:54 PM IST

டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஷிவம் துபேவின் அதிரடி பேட்டிங்கும், வருண் சக்கரவர்த்தியின் சுழல் மேஜிக்கும் அணியை வெற்றி பெற வைத்தன.

PREV
13
இந்தியா vs நெதர்லாந்து போட்டி

டி20 உலகக்கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. சிக்சர் மழை பொழிந்த ஷிவம் துபே வெறும் 31 பந்துகளில் 6 சிக்சர்கள், 4 பவுண்டரியுடன் 66 ரன்கள் விளாசினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 34 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா கடைசி கட்டத்தில் 21 பந்தில் 30 ரன்களும் எடுத்தனர்.

23
இந்திய அணி வெற்றி

பின்பு விளையாடிய நெதர்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 176 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அந்த அணியின் பாஸ் டி லீட் 33 ரன்கள் எடுத்தார். வருண் சக்கரவர்த்தி தனது மாயாஜால பந்துவீச்சின் மூலம் நெதர்லாந்து பேட்ஸ்மேன்களை முடக்கினார். 

வருண் சக்கரவர்த்தி 3 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார். ஷிவம் துபே 2 விக்கெட்டுகளும், பும்ரா, ஹர்திக் பான்ட்யா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

33
ஷிவம் துபே ஆல்ரவுண்டராக கலக்கல்

பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கி ஆல்ரவுண்டராக ஜொலித்த ஷிவம் துபே ஆட்டநாயகன் விருது வென்றார். இந்திய அணி லீக் சுற்றில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளூடன் கெத்தாக சூப்பர் 8 சுற்றில் நுழைந்துள்ளது. 

சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக பிப்ரவரி 22ம் தேதி விளையாட உள்ளது. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories