அதாவது அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆன அபிஷேக் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 பந்துகளில் டக் அவுட் ஆனார். இப்போது நெதர்லாந்துக்கு எதிராக 3 பந்துகளில் டக் அவுட்டாகியுள்ளார்.
நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அதிரடியில் பட்டையை கிளப்பிய அபிஷேக் சர்மா டி20 உலகக்கோப்பையிலும் கலக்குவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஏமாற்றம் தான் மிஞ்சியது
ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளார் அபிஷேக் சர்மா. இவரின் பலமே அவரது அதிரடி பேட்டிங் தான். முதல் பந்தில் இருந்தே சிக்சரும், பவுண்டரியுமாக நொறுக்கி எதிரணி பவுலர்களுக்கு பயம் காட்டுவார்.
ஆனால் இப்போது அதிரடியே அபிஷேக் சர்மாவுக்கு பலவீனமாக அமைந்துள்ளது. டி20 உலககோப்பை போன்ற பெரிய போட்டிகளில் வேகம் மட்டும் போதாது. விவேகமும் இருக்க வேண்டும்.