பின்பு சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி தொடக்கம் முதலே தடுமாறியது. குயின்டன் டி காக் ரன் ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் பந்தில் டக் அவுட்டானார். அர்ஷ்தீப் ஸ்டப்ஸையும் (14) அவுட்டாக்கினார். பின்பு டெவால்ட் பிரெவிஸ் மற்றும் மார்க்ராம் இணைந்து 40 ரன்கள் வரை கொண்டு சென்ற நிலையில், அக்சர் படேல் மார்க்ரமை (14) அவுட்டாக்கி பார்ட்னர்ஷிப்பை முறியடித்தார்.
தென்னப்பிரிக்கா படுதோல்வி
தொடர்ந்து 4 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த டெவால்ட் பிரெவிஸை பும்ராவும் டேவிட் மில்லரை (1) ஹர்திக் பாண்ட்யாவும் வெளியேற்றினார்கள். இதன்பிறகு டோனோவன் ஃபெரீரா (5) மற்றும் மார்கோ ஜான்சன் (12) ஆகியோர் சக்ரவர்த்தியின் சுழலில் வீழ்ந்தனர்.
மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் இரட்டை இலக்கத்தை தாண்டவில்லை. தென்னாப்பிரிக்கா அணி கடைசி 44 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. வெறும் 12.3 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 74 ரன்னில் சுருண்டு 101 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.