இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். நம்பர் 1 பாஸ்ட் பவுலர் ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். இதேபோல் காயத்தில் இருந்து குணமடைந்த சுப்மன் கில்லும் அணியில் இடம்பிடித்துள்ளார். அதே வேளையில் இந்திய அணியில் இருந்து 4 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு பிடித்த வீரரான ஹர்சித் ராணாவுக்கு அணியில் இடமில்லை.
சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் நீக்கம்
மேலும் சிறந்த பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின் பவுலர் குல்தீப் யாதவ், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம்பெறவில்லை. அதே வேளையில் மற்றொரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்க்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார்.