டெஸ்ட் தொடரில் தோல்வி கண்ட இந்திய அணி ஒருநாள் தொடரை வென்று அசத்தியது. இதேபோல் டி20 தொடரையும் கைப்பற்ற ஆயத்தமாகி உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் ஸ்டார் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தென்னாப்பிரிக்கா T20I தொடரில், 2,000 T20I ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் என்ற இரட்டை மைல்கல்லை எட்ட உள்ளார். அதாவது பாண்ட்யா இந்த தொடரில் 2000 T20 ரன்களை நிறைவு செய்ய 140 ரன்கள் தொலைவிலும், 100 விக்கெட்டுகளை வீழ்த்த இரண்டு விக்கெட்டுகள் தொலைவிலும் உள்ளார்.
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர்
T20I போட்டிகளில் பாண்ட்யா 100 விக்கெட்டுகளை நிறைவு செய்தால், இந்த சாதனையை எட்டும் இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெறுவார். தற்போது, அவர் 26.58 சராசரியில் 98 விக்கெட்டுகளுடன், குறுகிய வடிவ போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரராக உள்ளார். மறுபுறம், 120 போட்டிகளில், பாண்டியா 27.35 சராசரியுடன் 1860 ரன்களையும், 141.01 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ஐந்து அரை சதங்களையும் அடித்துள்ளார்.