பின்பு தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் (2), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (7) ஆகியோர் களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு இருவரும் 65 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.கே.எல்.ராகுல் 22 ரன்கள் எடுத்து கேசவ் மகாராஜ் பவுலிங்கில் எய்டன் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
துருவ் ஜூரல், ரிஷப் பண்ட் தவறான ஷாட்
சூப்பராக விளையாடி அரை சதம் அடித்த ஜெய்ஸ்வால் (58 ரன்) சைமன் ஹார்மர் பந்தில் அவுட் ஆனார். இதன்பின்பு இந்திய அணியின் விக்கெட்டுகள் கொத்து கொத்தாக சரிந்தன. சாய் சுதர்சன் (15) ஹார்மரின் ஷாட் பாலில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இளம் வீரர் துருவ் ஜூரல் ரன் எதும் எடுக்காமல் யான்சனின் ஷார்ட் பிட்ச் பந்தில் படுமோசமான ஷாட் அடித்து வெளியேறினார். பின்னர் கேப்டன் ரிஷப் பண்ட்டும் (7) யான்சன் பந்தில் தேவையில்லாமல் இறங்கி வந்து அவுட் ஆனார்.