IND vs NZ 2nd T20: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. திலக் வர்மா அதிரடி அரைசதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். நிதிஷ் குமார் ரெட்டி கைகொடுத்தார்.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று நடந்த 2வது டி20 போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. மிடில் ஓவர்களில் இந்திய அணி பயங்கரமாகத் தடுமாறியது. அப்போது ஜோடி சேர்ந்த திலக் வர்மா - நிதிஷ் குமார் ரெட்டி பார்ட்னர்ஷிப் 69 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது.
பவர்பிளேயில் 41/3 என சரிந்த அந்த அணியை, க்ளென் பிலிப்ஸ் மற்றும் பெவோன் ஜேக்கப்ஸ் ஜோடி அரைசதங்கள் அடித்து மீட்டெடுத்தது. 4வது விக்கெட்டுக்கு இவர்கள் 116 ரன்கள் சேர்த்தனர். க்ளென் பிலிப்ஸ் 46 பந்துகளில் 70 ரன்களும் (4 பவுண்டரி, 4 சிக்ஸர்), பெவோன் ஜேக்கப்ஸ் 46 பந்துகளில் 58 ரன்களும் (5 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
24
வைபவ் சூர்யவன்ஷி சொதப்பல்
நியூசிலாந்து நிர்ணயித்த 181 ரன்கள் டார்கெட்டை நோக்கி உலக சாம்பியனான இந்தியா களமிறங்கியது. அபிஷேக் சர்மாவும், சஞ்சு சாம்சனும் முதல் விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்தனர். 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த சாம்சன், க்ளென் பிலிப்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி 8 பந்துகளில் 4 ரன்கள் மட்டும் எடுத்து நாதன் ஸ்மித் பந்துவீச்சில் டேரில் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
34
திலக் வர்மா அதிரடி
அபிஷேக் சர்மா (21 பந்துகளில் 27 ரன்கள், 3 பவுண்டரி, 1 சிக்ஸர்) மிட்செல் சான்ட்னர் பந்துவீச்சில் நாதனிடம் கேட்ச் ஆனார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் எதிரணி பாஸ்ட் பவுலர்களை சிக்சரும், பவுண்டரியுமாக அடித்து கலங்கடித்தனர். இறுதி வரை களத்தில் நின்று ஒரு பந்து மீதமிருக்கும் போதே இந்தியாவை வெற்றி பெற வைத்தனர்.
சூப்பர் அரை சதம் விளாசிய திலக் வர்மா 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதேபோல் நிதிஷ் குமார் ரெட்டியும் 13 பந்துகளில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். திலக் வர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா இப்போது 2-0 என முன்னிலையில் உள்ளது. நியூசிலாந்து அணியில் பாஸ்ட் பவுலர்கள் சொதப்பினாலும் அந்த அணியின் கேப்டன் மிட்ச்செல் சான்ட்னர் 4 ஓவர்களில் வெற்றும் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்திய அணி தத்தளிக்கும்போதெல்லாம் மகேந்திர சிங் தோனி போல கைகொடுத்து அணியை வெற்றி பெற வைத்து வரும் திலக் வர்மா, இந்த போட்டியிலும் தான் குட்டி தோனி என்பதை நிரூபித்துள்ளார்.