இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சென்று 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 5 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்தியா - நியூசிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 22 (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
முதல் மேட்ச் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில் நடக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக களமிறங்கும் இந்த 16 பேர் கொண்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா, அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி போன்ற முக்கிய வீரர்கள் உள்ளனர்.
சமீபத்தில் உள்ளூரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சஞ்சு சாம்சன் சூப்பராக விளையாடியதால், அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல, நியூசிலாந்து மண்ணில் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்ற ஆர்வமும் ரசிகர்களிடம் எகிறியுள்ளது.