IND vs NZ 1st T20: அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் மரண அடி.. நியூசிலாந்தை ஊதித்தள்ளிய இந்தியா!

Published : Jan 21, 2026, 11:08 PM IST

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 239 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

PREV
14
அபிஷேக் சர்மா ருத்ரதாண்டவம்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 238 என்ற இமாலய ரன்கள் குவித்தது. அதிரடியில் வெளுத்துக்கட்டி சிக்சர் மழை பொழிந்த அபிஷேக் சர்மா வெறும் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் விளாசினார்.

24
இந்திய அணி இமாலய ரன்கள் குவிப்பு

சூர்யகுமார் 22 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்தார். கடைசியில் ரிங்கு சிங் 20 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 44 ரன்கள் அடித்து அணி 230 ரன்கள் கடக்க உதவினார். 

நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். மற்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்கினார்கள்.

34
கிளென் பிலிப்ஸ் அதிரடி ஆட்டம்

239 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணி டேவின் கான்வே (0), ரச்சின் ரவீந்திரா (1) என தொடக்க வீரர்கள் 2 பேரையும் வெறும் 2 ரன்களுக்கு இழந்து பரிதவித்தது. அதிரடியில் பட்டையை கிளப்பிய கிளென் பிலிப்ஸ் 40 பந்துகளில் 6 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

44
இந்திய அணி அபார வெற்றி

மார்க் சாப்மேன் 24 பந்துகளில் 39 ரன்களும், டேரில் மிட்ச்செல் 18 பந்துகளில் 28 ரன்களும், கேப்டன் மிட்ச்செல் சாண்ட்னர் 13 பந்தில் 20 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ஷிவம் துபே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அர்ஷ்தீப் சிங் அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட் சாய்த்தனர். அதிரடி அரை சதம் விளாசிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories