IND vs ENG 4th Test: Sai Sudarshan Back In The Indian Team
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. லார்ட்ஸில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி இன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார்.
24
சாய் சுதர்சனுக்கு மீண்டும் அணியில் இடம்
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. 4வது டெஸ்ட்டில் இந்திய அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் மூன்று டெஸ்ட்களில் சரியாக விளையாடாத கருண் நாயர் நீக்கபட்டுள்ளார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சனுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. முதல் டெஸ்ட்டில் அறிமுகமாகி சரியாக விளையாடாத சாய் சுதர்சன் அடுத்த 3 டெஸ்ட்களிலும் கழட்டி விடப்பட்டார். இப்போது மீண்டும் அவருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
34
ஆகாஷ் தீப், நிதிஷ்குமார் ரெட்டி இல்லை
இதேபோல் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக மற்ரொரு ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் பாஸ்ட் பவுலர் ஆகாஷ் தீப் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி விட்டார். மற்றொரு பாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் காயம் காரணமாக 4வது டெஸ்ட்டில் விளையாடவில்லை. இதனால் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் அன்ஷீல் கம்போஜ் இந்திய அணியில் அறிமுக வீரராக இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன்
இந்திய அணி பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், சாய் சுதர்சன், ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அன்ஷுல் கம்போஜ். இந்த 4வது டெஸ்ட் போட்டியில் வென்றால் தான் இந்தியாவால் இந்த தொடரை வெல்லவோ அல்லது டிரா செய்யவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.