India vs Australia, Rohit Sharma | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்தது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களம் இறங்கி உள்ளது.
24
ஷாக் கொடுத்த முக்கிய வீரர்கள்
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. அதன் அடிப்படையில் இந்திய கேப்டன் சுப்மன் கில், ரோகித் ஷர்மா இன்னிங்சை தொடங்கினர். போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே இந்திய ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக கில் வெறும் 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய விராட் கோலி 4 பந்துகளை மட்டும் எதிர் கொண்டு ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
34
ரோகித், ஸ்ரேயாஸ் பொறுப்பான ஆட்டம்
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரோகித், ஸ்ரேயாஸ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்கள் இருவரும் அரை சதம் கடந்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். 97 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் 2 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 73 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்சல் ஸ்டார் பந்தில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஸ்ரேயாஸ் 61 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த நிலையில் இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்தது.
அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி மொத்தமாக 153 பந்துகளை டாட் வைத்துள்ளது. இது போட்டின் பாதிக்கும் அதிகமான பந்து என்பது குறிப்பிடத்தக்கது.