ODI கிரிக்கெட்டுக்கும் முழுக்கு போடும் கோலி..? அவுட்டானதும் அவர் கொடுத்த சிக்னல பாத்தீங்களா..?

Published : Oct 23, 2025, 11:31 AM IST

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் டக் அவுட்டான விராட் கோலி ODI கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறப்போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

PREV
14
அடிலெய்டில் மல்லுக்கட்டும் இந்தியா

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் மழை குறுக்கிட்ட நிலையில் டக்வொர்ட் லூயிஸ் விதிப்படி ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

24
அதிர்ச்சி கொடுத்த கில்

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் வெறும் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார்.

34
அடிலெய்ட் மைதானத்தின் செல்லப்பிள்ளை

அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய விராட் கோலி வெறும் 4 பந்துகளை மட்டும் எதிர் கொண்டு டக் அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினார். அடிலெய்டு நீண்ட காலமாக கோலியின் கோட்டையாக இருந்து வருகிறது. அனைத்து வடிவங்களிலும், அவர் இந்த மைதானத்தில் 975 ரன்கள் எடுத்துள்ளார், இது எந்தவொரு வெளிநாட்டு பேட்டருக்கும் இல்லாத சாதனையாகும். இருப்பினும், வியாழக்கிழமை, அவர் பேட்டிங் செய்ய வந்தபோது கிடைத்த கரகோஷம், ஆடுகளத்தில் ஒரு குறுகிய, கசப்பான தருணமாக மாறியது.

44
ஓய்வு பெறும் கோலி..?

விராட் கோலி டக் அவுட்டாகி மைதானத்தை விட்டு வெளியேறியபோது வழக்கத்திற்கு மாறாக கையை உயர்த்தயபடி ரசிகர்களுக்கு ஏதோ சொல்வது போல் நடந்து சென்றார். கோலியின் இந்த செயல் அடிலெய்டில் குவிந்திருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் செயலா அல்லது ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான அறிகுறியா என்ற விவாதம் எழுந்துள்ளது. தற்போது, கோலி (ஒருநாள் போட்டிகளில் 51 சதங்கள்) மற்றும் சச்சின் (டெஸ்டில் 51) ஆகியோர் ஒரே வடிவத்தில் ஒரு பேட்டர் அடித்த அதிக சதங்களுக்கான சாதனையை சமமாகப் பகிர்ந்துள்ளனர். இன்னும் ஒரு சதம் அடித்தால், அது ஒருநாள் போட்டிகளில் அவரது 52வது சதமாக இருக்கும், இது ஒரே வடிவத்தில் ஒரு பேட்டர் அடித்த அதிக சதங்களைக் குறிக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories