விராட் கோலி சாதனை பட்டியல்!
இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
இந்தியா - ஆஸ்திரேலியா!
அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில், சுப்மன் கில் 4 ரன்களில் ஆட்டமிழக்கவே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர்.
விராட் கோலி
இதில், ரோகித் சர்மா 31 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் வெளியேறினார்.
அரையிறுதி, இறுதிப் போட்டியில் அரைதம் அடித்து சாதனை
இதையடுத்து விராட் கோலியுடன் கேல் ராகுல் இணைந்து இருவரும் பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். கோலி 56 பந்துகளில் 4 பவுண்டரி உள்பட 50 ரன்கள் சேர்த்தார். இதன் மூலமாக இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் 6ஆவது அரைசதம் அடித்தார்.
தொடர்ந்து 5 முறை அரைசதம்
இதன் மூலமாக 48 ஆண்டுகால உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
விராட் கோலி 3 சதம்
அதுமட்டுமின்றி, இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி 85, 55 (நாட் அவுட்), 16, 103 (நாட் அவுட்), 95, 0, 88, 101 (நாட் அவுட்), 51, 117 மற்றும் 54 என்று மொத்தமாக 765 ரன்கள் குவித்துள்ளார். இதில், 3 சதம் மற்றும் 6 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 117 ரன்கள் எடுத்துள்ளார்.
விராட் கோலி 6 முறை அரைசதம்
எந்த வீரரும் செய்யாத சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி 765 ரன்கள் குவித்து படைத்துள்ளார்
விராட் கோலி 765 ரன்கள் குவித்து சாதனை
அதுமட்டுமின்றி, 2019 ஆம் ஆண்டு தொடர்ந்து 50 ரன்களுக்கு மேல் 5 முறை கைப்பற்றியிருந்தார். அதே போன்று இந்த உலகக் கோப்பை போட்டியிலும் தொடர்ந்து, 50 ரன்களுக்கு மேல் 5 முறை எடுத்துள்ளார்.