IPL 2023: LSG அணியில் ஆடியிருக்க வேண்டியவன் நான்..! அவருக்காகத்தான் GT அணிக்கு ஓகே சொன்னேன் - ஹர்திக் பாண்டியா

Published : Apr 15, 2023, 03:57 PM IST

2022 ஐபிஎல்லில் புதிதாக களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தான் முதலில் தன்னை அணுகியதாகவும், அதன்பின்னர் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டது எப்படி என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.  

PREV
15
IPL 2023: LSG அணியில் ஆடியிருக்க வேண்டியவன் நான்..! அவருக்காகத்தான் GT அணிக்கு ஓகே சொன்னேன் - ஹர்திக் பாண்டியா

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 15வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளும் முதல் முறையாக களமிறங்கின. முதல் சீசனில் புதிதாக இறங்கிய  2 அணிகளுமே முதல் சீசனில் அபாரமாக ஆடின. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுக சீசனில் முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
 

25

இந்த சீசனிலும் இரு அணிகளும் சிறப்பாக ஆடிவருகின்றன. முதல் சீசனில் பேட்டிங், பவுலிங்கில் மட்டுமல்லாது கேப்டன்சியிலும் அபாரமாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஹர்திக் பாண்டியா, இந்திய அணியிலும் ரோஹித்துக்கு அடுத்த கேப்டனாக உருவெடுத்துள்ளார்.

IPL 2023: தொடர் தோல்விகளிலிருந்து மீளுமா பஞ்சாப் கிங்ஸ்..? LSG vs PBKS அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

35

இந்த சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஹர்திக் பாண்டியா சுவாரஸ்யமான தகவல் ஒன்றை கூறியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தான் தன்னை முதலில் அணுகியதாகவும், அதன்பின்னர் ஆஷிஷ் நெஹ்ரா தன்னை கேட்டுக்கொண்டதால் தான் குஜராத் டைட்டன்ஸுடன் இணைந்ததாகவும் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். 

45

இதுகுறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, 2022 ஐபிஎல்லில் 2 அணிகள் புதிதாக களமிறங்கின. அப்போது இன்னொரு அணி தான்(லக்னோ) என்னை முதலில் அணுகியது. அந்த அணிக்கு கேஎல் ராகுல் தான் கேப்டன். ராகுலின் கேப்டன்சியில் ஆட அணுகினர். நான் பொதுவாகவே என்னை பற்றி தெரியாதவர்களுடன் ஆடுவதை விட, நல்ல பழக்கமானவர்களுடன் இணைந்து செயல்படுவதை விரும்புவேன். ராகுல் எனக்கு நெருக்கமானவர் என்பதால் அவருடன் இணைந்து ஆடலாம் என நினைத்தேன். 

IPL 2023: வாயை கொடுத்து வாங்கி கட்டிய அஷ்வின்..! ஆப்பு அடித்த ஐபிஎல் நிர்வாகம்

55

அதன்பின்னர் தான் ஆஷிஷ் நெஹ்ரா என்னை தொடர்புகொண்டார். அப்போது குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்பான எதுவும் உறுதியாகவில்லை. ஆனால் அவர் (நெஹ்ரா) தான் பயிற்சியாளர் என்பது உறுதி என்பதை என்னிடம் தெரீவ்த்தார். நெஹ்ரா குஜராத் அணியின் பயிற்சியாளர் என்பதால் தான் நான் அந்த அணியில் ஒப்பந்தம் ஆனேன் என்றார் நெஹ்ரா.
 

Read more Photos on
click me!

Recommended Stories