இந்திய பிரபலங்களை திருமணம் செய்து கொண்ட வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் யார் யார் தெரியுமா?

First Published | Jun 23, 2024, 7:16 PM IST

கிளென் மேக்ஸ்வெல் முதல் மோசின் கான் வரையில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்திய பிரபலங்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Glenn Maxwell and Vini Raman

ஆஸ்திரேலியா அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிளென் மேக்ஸ்வெல் உடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வினி ராமன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட போது இருவரது காதல் குறித்து விவாதம் தொடங்கியது. மேக்ஸ்வெல் மற்றும் வினி ராமன் இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். இது அவர்களது உறவை அதிகாரப்பூர்வமாக்கியது.

கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி இருவரும் கிறிஸ்துவ முறைப்படியும், மார்ச் 27ஆம் தேதி தமிழ் பாரம்பரி முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர்.

Shaun Tait and Mashoom Singha

ஷான் டைட் மற்றும் மஷூம் சிங்கா:

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளரான ஷான் டைட் மற்றும் இந்திய ராம்ப் மாடலான மஷூம் சிங்கா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண கொண்டாட்டத்திற்காக டைட் நண்பர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து மும்பைக்கு பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

முத்தையா முரளிதரன் – மதிமலர் ராமமூர்த்தி:

முத்தையா முரளிதரன் – மதிமலர் ராமமூர்த்தி:

கடந்த 2005 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் சென்னையை சேர்ந்த மதிமலர் ராமமூர்த்தி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மலர் மருத்துவமனையின் உரிமையாளர் மறைந்த டாக்டர் எஸ் மற்றும் நித்யா ராமமூர்த்தியின் மகள் தான் மதிமலர் ராமமூர்த்தி.

ஹசன் அலி மற்றும் சாமியா அர்சூ:

ஹசன் அலி மற்றும் சாமியா அர்சூ:

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலி. இவர், ஃபரிதாபாத்தில் வசிக்கும் விமானப் பொறியாளரான சாமியா அர்சூவை திருமணம் செய்து கொண்டார். எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் பொறியியலாளராக இருப்பவர் தான் அர்சூ. கடந்த 1995 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று ஹரியானாவின் நுஹ் மாவட்டத்தில் உள்ள சந்தேனி கிராமத்தில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசின் கான் மற்றும் ரீனா ராய்:

மோசின் கான் மற்றும் ரீனா ராய்:

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான மோசின் கான் பாலிவுட் நடிகையான ரீனா ராயை கடந்த 1983 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குறுகிய கால இடைவெளியில் இருவரும் பிரிந்துள்ளனர்

Latest Videos

click me!