இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் - ஏன் இந்த தேர்வு?

Published : Aug 14, 2024, 05:59 PM IST

இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டுள்ளார். ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் போன்றோர் இருந்தும் மோர்கல் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. கவுதம் காம்பீரின் பங்கு இதில் எந்த அளவிற்கு இருந்தது என்பதும் ஆர்வத்தை தூண்டுகிறது.

PREV
19
இந்திய அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் - ஏன் இந்த தேர்வு?
Morne Morkel

இந்திய அணியில் முன்னாள் பந்து வீச்சாளர்களான ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், ஆஷிஷ் நெஹ்ரா, லட்சுமிபதி பாலாஜி, அனில் கும்ப்ளே, ஜவஹல் ஸ்ரீநாத் என்று பலர் இருந்தும், தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

29
Indias Bowling Coach

மோர்னே மோர்கல்லை விட ஜாகீர் கான் அனுபவத்திலும், பந்து வீச்சிலும் சிறந்தவர். ஆனாலும், அவர் ஏன் இந்திய அணியின் பயிற்சியாளராக இடம் பெறவில்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இந்திய வீரர்கள் தான் பயிற்சியாளர்களாக இருந்து வருகின்றனர். அப்படியிருக்கும் போது காம்பீர் சொன்ன ஒரே காரணத்திற்காக தற்போது மோர்கல் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார்.

39
Morne Morkel Net Worth

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் காம்பீரின் வேண்டுகோளுக்கிணங்க மோர்னே மோர்கல் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

49
Morne Morkel

இதற்கு முன்னதாக ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்த போது பராஸ் மாம்ப்ரே பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார். ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியின் கீழ் இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை வென்றதைத் தொடர்ந்து ராகுல் டிராவிட், விக்ரம் ரத்தோர், பராஸ் மாம்ப்ரே ஆகியோரது பதவிக்காலம் முடிந்தது.

59
Gautam Gambhir and Morne Morkel

இதைத் தொடர்ந்து இலங்கை தொடரிலிருந்து கவுதம் காம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவருடன் இணைந்து உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட், பீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

69
Team India

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் காம்பீர் கேப்டனாக இருந்த போது அணியில் இடம் பெற்று விளையாடியிருக்கிறார். அதுமட்டுமின்றி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிலும் 2 ஆண்டுகள் காம்பீர் உடன் இணைந்து மோர்னே மோர்கல் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

79
Indian Cricket Team

மோர்னே மோர்கலின் பந்து வீச்சு பற்றி பார்க்கும் போது 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 309 விக்கெட்டுகளையும், 117 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 188 விக்கெட்டுகளையும், 44 டி20 போட்டிகளில் இடம் பெற்று 47 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

89
Indias New Bowling Coach Morne Morkel

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மோர்னே மோர்கலின் பதவிக்காலம் தொடங்குகிறது. இந்தியா வரும் வங்கதேச அணிக்கு எதிரான தொடரின் மூலமாக மோர்கலின் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

99
Morne Morkel

இதற்கு முன்னதாக இலங்கை சுற்றுப்பயணத்தில் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த இந்திய அணியின் முன்னாள் லெக் ஸ்பின்னர் சாய்ராஜ் பஹுதுலே தொடர்ந்து இந்திய அணியில் துணை ஊழியர்களில் ஒருவராக இருப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories