விராட் கோலியின் ஆர்சிபி எல்லா போட்டியிலும் தோற்க வேண்டும் – அதுல் வாசன்!

First Published | Apr 7, 2024, 4:55 PM IST

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அதுல் வாசன் ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்க வேண்டும் என்று வினோதமான ஆசையை முன் வைத்துள்ளார்.

RR vs RCB, IPL 2024

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடிய 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது.

Virat Kohli, IPL 2024 Points Table

இந்த சீசனை தோல்வியோடு தொடங்கிய ஆர்சிபி, ஹோம் மைதானமான எம்.சின்னச்சுவாமி ஸ்டேடியத்தில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tap to resize

Virat Kohli, RCB Points Table

அதன் பிறகு நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிராக 28 ரன்கள் வித்தியாசத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்தது. நேற்றைய போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் ஆர்சிபி மீது மோசமான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

IPL 2024

ஆனால், இந்திய அணியின் முன்னாள் வீரர் அதுல் வாசன் வினோதமான ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். தனது குழந்தைப் பருவப் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மாவை உரிமையாளரின் பயிற்சிக் குழுவில் சேர்க்காத விராட் கோலியின் முடிவை மேற்கோள் காட்டி, RCB அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியடைவதைப் பார்க்க வேண்டும் என்பதை தனது விருப்பமாக தெரிவித்துள்ளார்.

Virat Kohli

ஆர்சிபி அனைத்து போட்டிகளிலும் தோற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியில் நிறைய பயிற்சியாளர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். ஆனால், அவர் தனது பயிற்சியாளரை (ராஜ்குமார் சர்மாவை) ஆர்சிபி அணியில் இடம் பெற செய்யவில்லை. அதனால், ஆர்சிபி எப்போதும் தோற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Royal Challengers Bengaluru

வெற்றிக்காக ஆர்சிபி போராடினாலும், தனிநபராக விராட் கோலி பல சாதனைகளை தனதாக்கிக் கொண்டு வருகிறார். அந்த வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த 19ஆவது லீக் போட்டியின் மூலமாக விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட்டில் 7500 ரன்களை கடந்தார்.

Virat Kohli

மேலும், இந்த சீசனில் சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதோடு 5 போட்டியில் விளையாடி விராட் கோலி 21, 77, 83*, 22, 113* என்று மொத்தமாக 316 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப்பை தன் வசப்படுத்தியிருக்கிறார். அதோடு, ஒரு பீல்டராக 110 கேட்சுகள் பிடித்து, ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் பிடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Latest Videos

click me!