IPL 2023: சென்னைக்கு தாயும், தகப்பனுமா தோனி இருக்கும் போது எவனால் ஜெயிக்க முடியும்: ஹர்பஜன் சிங்!

First Published | Apr 9, 2023, 10:18 AM IST

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து முன்னாள் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங், டுவிட்டரில் தோனி ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்து தடுத்தாலும் அது தவுடிப்பிடி தான் என்று பதிவிட்டுள்ளார்.
 

சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடையிலான 12ஆவது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது.

துஷார் தேஷ்பாண்டே

அதன்படி முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, சாண்ட்னர் ஆகியோர்  தடையாக இருந்தனர். ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்திருந்த போது துஷார் தேஷ்பாண்டே ஓவரில் கிளீன் போல்டானார்.

Tap to resize

எம்எஸ் தோனி

இஷான் கிஷான் அடித்து ஆட முயற்சித்த போது ஜடேஜா ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். வழக்கம் போல் சூர்யகுமார் யாதவ் சாண்ட்னர் ஓவரில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால், நடுவர் அவுட் கொடுக்காத போது தோனி டி ஆர்எஸ்எடுக்க, பந்து கிளவுசில் பட்டது தெளிவாக தெரிந்தது. 

ரோகித் சர்மா

அதன் பிறகு நடுவர் அவுட் கொடுத்தார். இதையடுத்து வந்த திலக் வர்மா 22 ரன்னிலும், டிம் டேவிட் 31 ரன்னிலும், ரித்திக் ஷோகீன் 18 ரன் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ்

பந்து வீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும், சாண்ட்னர் 2 விக்கெட்டும், மகாளா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர், எளிய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

மும்பை வான்கடே ஸ்டேடியம்

அதன் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புது வரவான அஜிங்க்யா ரஹானா அவரது ஹோம் மைதானத்தில் களமிறங்கினார். ஆரம்பம் முதலே அதிரடி காட்டி, ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார்.

அஜிங்க்யா ரஹானே

அர்ஷாத் கானின் ஒரே ஓவரில் 6,4,4,4,4,4 என்று 26 ரன்கள் எடுத்தார். ரஹானே 27 பந்துகளில் 7 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உள்பட 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபெ வழக்கம் போன்று சிக்சர், பவுண்டரி அடித்துவிட்டு 28 ரன்களில் வெளியேறினார். 

எம்எஸ் தோனி

மற்றொரு தொடக்கவீரர் ருத்துராஜ் கெய்க்வாட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 40 ரன்னிலும், அம்பத்தி ராயுடு 20 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 போட்டிகளில் 2 வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை தழுவியுள்ளது. வரும் 11 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது. 

ருத்துராஜ் கெய்க்வாட்

வரும் 12 ஆம் தேதி சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், சென்னை அணியின் வெற்றி குறித்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

ஹர்பஜன் சிங் டுவிட்டர் பதிவு!

ரவீந்திர ஜடேஜா

தல தோனி ஜெயிக்கணும்னு முடிவு பண்ணிட்டா கடவுளே வந்து தடுத்தாலும் அது தவுடிப்பிடி தான்.குதியாட்டம் போடுற எதிர் டீமுக்கு முன்னாடி பேட்டைக்காளியா நின்னு சம்பவம் செஞ்சு இந்த  சென்னை ஐபிஎல்லுக்கு தாயும்.. தகப்பனும்மா அவர் இருக்கும்போது, ஐபிஎல்லில் இவனை வெல்ல எவன் இங்கு தல CSKvsMI என்று பதிவிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் டுவிட்டர் பதிவு!

Latest Videos

click me!