#INDvsENG பகலிரவு டெஸ்ட்: இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்..! டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் தரமான முடிவு

First Published Feb 24, 2021, 2:30 PM IST

இந்தியா இங்கிலாந்து இடையே பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கும் 3வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடந்தன. 3 மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கின்றன. அகமதாபாத் கிரிக்கெட் ஸ்டேடியத்தை, இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார். மொடேரா ஸ்டேடியம் என்றிருந்த இந்த ஸ்டேடியத்தின் பெயர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
undefined
பகலிரவு போட்டி என்பதால் பிங்க் பந்தில் ஆடப்படுகிறது இந்த டெஸ்ட். இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குவதால், 2 மணிக்கு டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
undefined
இந்த போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். பேட்டிங் டெப்த்தை கருத்தில்கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
undefined
ஃபாஸ்ட் பவுலர் பும்ரா ஆடுவதால், சிராஜ் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார். இந்த பிங்க் பந்து டெஸ்ட்டில் ஆடுவதற்காகத்தான், 2வது டெஸ்ட்டில் பும்ராவிற்கு ஓய்வே அளிக்கப்பட்டது.
undefined
இந்திய அணி:ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அஷ்வின், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, பும்ரா.
undefined
இங்கிலாந்து அணியில் 4 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க வீரர் ரோரி பர்ன்ஸுக்கு பதிலாக ஜாக் க்ராவ்லியும், லாரன்ஸுக்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோவும் சேர்க்கப்பட்டுள்ளனர். மொயின் அலி மற்றும் ஆலி ஸ்டோன் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, ஃபாஸ்ட் பவுலர்கள் ஆர்ச்சர் மற்றும் ஆண்டர்சன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
undefined
இங்கிலாந்து அணி:சிப்ளி, க்ராவ்லி, பேர்ஸ்டோ, ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ்(விக்கெட் கீப்பர்), ஆலி போப், ஆர்ச்சர், லீச், ஸ்டூவர்ட் பிராட், ஆண்டர்சன்.
undefined
click me!