Robin Singh
இந்திய அணியின் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர் ராபின் சிங். கிரிக்கெட்டில் கிழட்டு சிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். இப்போது தான் விராட் கோலி, எம்.எஸ்.தோனியின் ரன்னிங்கைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறோம். அப்போது எல்லாம் மின்னல் வேகத்தில் ஓடக் கூடிய ஒரே ஜாம்பவானாக ராபின் சிங் திகழ்ந்தார்.
robin singh
1989 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்காக விளையாடினார். ராபின் சிங் வெஸ்ட் இண்டீஸில் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பிரின்சஸ் டவுனில் பிறந்தார். ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தாலும் இந்திய கிரிக்கெட்டில் செல்வாக்கு மிக்கவராக திகழ்நதார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை முன்னிலைப்படுத்திய முதல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையை பெற்ற ராபின் சிங்கின் கிரிக்கெட் பயணம் நெகிழ்ச்சியுடனும், உறுதியுடனும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய ராபின் சிங் 15 ரன்கள் மற்றும் 12 ரன்கள் எடுத்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் தவிர ஒருநாள் கிரிக்கெட்டில் தனது பேட்டிங், சிறப்பான பீல்டிங், வேகம் மற்றும் நடுத்தர பந்து வீச்சு ஆகியவற்றின் மூலமாக இந்திய அணியின் சிறந்த வீரராக புகழ் பெற்றார்.
Indian Cricket Team - Robin Singh
ராபின் சிங்கை அனைவரும் கிழட்டு சிங்கம் என்றே அழைத்தனர். 1999 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரிலும் இடம் பெற்று விளையாடியிருக்கிறார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இந்திய அணியின் நம்பிக்கையான சொத்தாக திகழந்தார். 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ராபின் சிங் 2336 ரன்கள் குவித்திருக்கிறார். அதோடு ஒரு சதம் மற்றும் 9 அரைசதங்கள் விளாசியிருக்கிறார். அதிகபட்சமாக 100 ரன்கள் எடுத்துள்ளார்.
பவுலிங்கிலும் 69 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். 2004 ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ராபி சிங் பயிற்சி வகுப்பை தொடங்கி நடத்தி வருகிறார். ஜூனியர் மற்றும் ஏ அணிகளில் தொடங்கிய ராபின் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை இந்திய அணியில் இடம் பிடிக்க வைத்தது.
Robin Singh
இந்திய அணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த ராபின் சிங் பீல்டிங் பயிற்சியாளராக அணியில் இடம் பெற்றார். ராபின் சிங்கின் சிறப்பான பயிற்சி அவர் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சிபிஎல் அணிகளுக்கு ஆலோசகராக நியமித்தது. ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் இடம் பெற்று தனது பங்களிப்பை அளித்திருக்கிறார்.
கிரிக்கெட் வீரராகவும், பயிற்சியாளராகவும் ராபின் சிங்கின் தாக்கம் இந்திய அணியில் மறுக்க முடியாத இடத்தை தக்க வைக்க உதவியது