IND vs BAN 1st Test
ஜூன் 25, 1932 ஆம் ஆண்டு இந்தியா தனது முதல் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. 92 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியான வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் வரலாற்று சாதனை படைக்கும். அது என்ன சாதனை என்று பார்க்கலாம் வாங்க…
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 19 ஆம் தேதி தொடங்கி 23 ஆம் தேதி வரையில் சென்னையில் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டனர். 2ஆவது டெஸ்ட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
Indian Cricket Team
செப்டம்பர் 23 ஆம் தேதி இந்திய அணியின் வரலாற்று சிறப்புமிக்க நாட்களில் ஒன்றாக இருக்கலாம். ஏனென்றால், வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா 23 ஆம் தேதி அல்லது அதற்கு முன் வெற்றி பெற்றால், அவர்களின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக, தோல்வியை விட அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையை படைத்த அணியாக சாதனை படைக்கும்.
1952ல் இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற இந்திய அணி 20 ஆண்டுகள் ஆனது. தற்செயலாக, அந்த வரலாற்று வெற்றி, இந்தியா vs வங்கதேசம் 1வது டெஸ்ட் போட்டிக்கான மைதானமான சென்னையில் நிகழ்ந்தது.
Team India
179 டெஸ்ட் வெற்றிகளை நோக்கிய இந்தியா அணியின் பயணம்:
1988 வரை இந்தியா தோல்விகளை விட அதிக வெற்றிகளுடன் (3-1) ஒரு வருடத்தை முடித்தது இல்லை. 2009ல், இந்திய அணி 100வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இந்திய அணி 432 போட்டிகளில் விளையாடி வெற்றி சதவீதம் வெறும் 23.14 ஆக இருந்தது. அடுத்த 15 ஆண்டுகளில், இந்திய அணி 147 போட்டிகளில் 78-ல் வெற்றி பெற்று 53.06 சதவீத வெற்றியைப் பெற்று ஆச்சரியம் அளித்தது.
இதுவரையில் 1932 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணி விளையாடிய 579 போட்டிகளில் 178 வெற்றிகளையும், 178 தோல்விகளையும் கண்டுள்ளது. அதோடு, 222 போட்டிகள் டிராவிட் முடிந்தது. மேலும், ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. வெற்றி சதவிகிதம் 30.74 சதவிகிதம், அதோடு தோல்வி சதவிகிதம் 30.74 சதவிகிதமாக உள்ளது.
India vs Bangladesh Test
இந்தியா தனது 580ஆவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இதில், வெற்றி பெற்றால் வரலாற்றில் முதல் முறையாக தோல்வியை விட அதிக வெற்றிகளை குவித்த அணி என்ற சாதனையை படைப்பதோடு, இந்தியாவை நேர்மறையான சாதனைக்கு அழைத்து செல்லும்.
மேலும், அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற 4வது அணியாகவும் மாறும். இன்னும் 5 வெற்றிகளைப் பெற்றால் டெஸ்ட் வரலாற்றில் 3வது வெற்றிகரமான கிரிக்கெட் அணியாக மாறும். இந்திய அணியின் இந்த டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் 36 கேப்டன்கள் வந்து சென்றுள்ளனர். அதில் சிகே நாயுடு முதல் கேப்டனாக இருந்தார். ரோகித் சர்மா தற்போதைய இந்திய அணியின் கேப்டனாக திகழ்கிறார்.
Test Cricket
இந்த 92 வருடங்களில் 314 வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் வீரராக அமர் சிங் அறியப்பட்டார். அவர் ஜூன் 25 ஆம் தேதி 1932 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடைசியாக தேவ்தத் படிக்கல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடந்த மார்ச் 7ஆம் தேதி 2024, தர்மசாலாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமானார்.