விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா? அடேங்கப்பா.. பிசிசிஐ ஒப்பந்த ஊதியத்தை விட அதிகம்

First Published Jul 22, 2022, 6:02 PM IST

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒரு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் ரூ.8.7 கோடி வருவாய் ஈட்டுகிறார். 
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களை விளாசியுள்ள கோலி, கடந்த இரண்டரை ஆண்டாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் ஃபார்மில் இல்லாமல் திணறிவருகிறார்.

இந்தியாவிற்காக 102 டெஸ்ட், 262 ஒருநாள் மற்றும் 99 டி20 போட்டிகளில் ஆடியுள்ள விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 23 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்.
 

ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ம் ஆண்டிலிருந்து இப்போது வரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே ஆடிவரும் விராட் கோலி, ஐபிஎல்லில் 223 போட்டிகளில் ஆடி 6624 ரன்களை குவித்துள்ளார்.

விராட் கோலி சர்வதேச அளவில் டாப் விளையாட்டு வீரர்களில் ஒருவர். அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு, ஃபிட்னெஸ் ஆகியவற்றிற்கு பெயர்போன விராட் கோலி, கிரிக்கெட்டை கடந்து மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் ரோல் மாடலாக திகழ்ந்துவருகிறார். 

சமூக வலைதளங்களில் அவரை கோடிக்கணக்கானோர் பின்பற்றுகின்றனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் கோலியை 200,703,169 பேர் பின்பற்றுகின்றனர். சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராம் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள் பட்டியலில் 14ம் இடத்தில் உள்ளார் விராட் கோலி. டாப் 25ல் இடம்பிடித்த ஒரே நபர் விராட் கோலி மட்டுமே.

விராட் கோலி இன்ஸ்டாகிராமில் இடும் ஒரு பதிவின் மூலம் ரூ.8.7 கோடி வருவாய் ஈட்டுகிறார். பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்த ஊதியமே விராட் கோலிக்கு ரூ.7 கோடி தான். அதைவிட அதிகமாக ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டின் மூலம் சம்பாதிக்கிறார் கோலி.
 

click me!