IPL: களமிறங்காமலேயே விடைபெறும் 'தல' தோனி? அதிர்ச்சியில் உறைந்த சிஎஸ்கே ரசிகர்கள்!

Published : Mar 30, 2026, 03:35 PM IST

44 வயதான தோனி, கடந்த சில சீசன்களாக தனது பங்களிப்பை படிப்படியாக குறைத்து வருகிறார். ஃபினிஷராக மட்டும் களமிறங்கும் தோனிக்கு பதிலாக, நீண்ட கால அடிப்படையில் ஒரு விக்கெட் கீப்பரை கண்டுபிடிப்பது CSK-வுக்கு முக்கியமானதாக இருந்தது.

PREV
15
சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா களைகட்டியுள்ளது. இதுவரை 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்றைய போட்டியில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் களமிறங்குகின்றன. கடந்த இரண்டு சீசன்களும் சிஎஸ்கே அணிக்கு எதிர்பார்த்தபடி போகவில்லை. ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக 2025 சீசனிம் சென்னை அணி கடைசி இடம் பிடித்தது. 2026 ஐபிஎல் சீசனில் இந்த மோசமான வரலாற்றை மாற்ற சிஎஸ்கே முயற்சிக்கும்.

25
தோனிக்கு காயம்

இந்த முக்கியமான தொடரில் சிஎஸ்கே அணியின் துருப்புச்சீட்டாக விளங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட தல தோனி காயம் அடைந்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது எம்.எஸ். தோனி, காயம் காரணமாக முதல் இரண்டு வாரங்களுக்கு விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டது. 'எம்.எஸ். தோனி தற்போது கால் தசைப்பிடிப்பு காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், ஐபிஎல் 2026-ன் முதல் இரண்டு வாரங்களுக்கு அவர் விளையாட வாய்ப்பில்லை. விரைவில் குணமடையுங்கள், தலைவா' என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.

35
ஓய்வு பெறும் தோனி?

இந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும்விதமாக தோனி ஐபிஎல் 2026 தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என்றும் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஓய்வு பெறுவார் என தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில் தோனி இரண்டு வாரங்களுக்குள் குணமடைந்தாலும் 44 வயதில் அவர் மீண்டும் உடல்தகுதி பெற முடியுமா? எனற கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக அவர் இந்த தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என தகவல்கள் கசிகின்றன. இது குறித்து சிஎஸ்கே நிர்வாகத்துக்கு தெரிந்திருந்தாலும், அவர்கள் இதை இரண்டு வாரத்துக்கு பிறகே வெளிக்காட்டுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

45
தோனிக்கு பதில் சஞ்சு சாம்சன்

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் எம்.எஸ். தோனிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக கேரள வீரர் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்வார் என சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். சஞ்சு சாம்சனின் வருகை குறித்து காசி விஸ்வநாதன் பேசுகையில், ''எம்.எஸ். தோனி விளையாடாததால், சஞ்சு சாம்சன்தான் விக்கெட் கீப்பராக இருப்பார். சஞ்சு இப்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். வலைப்பயிற்சியிலும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். CSK எதிர்பார்க்கும் அந்த தாக்கத்தை சஞ்சு ஏற்படுத்துவார் என்று நாங்கள் நம்புகிறோம். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் அணி புதிய உயரங்களை எட்டும் என்றும், சஞ்சுவின் வருகை அணிக்கு பெரும் பலமாக இருக்கும்'' என்றார்.

55
சஞ்சு மீது அதிக அழுத்தமா?

44 வயதான தோனி, கடந்த சில சீசன்களாக தனது பங்களிப்பை படிப்படியாக குறைத்து வருகிறார். ஃபினிஷராக மட்டும் களமிறங்கும் தோனிக்கு பதிலாக, நீண்ட கால அடிப்படையில் ஒரு விக்கெட் கீப்பரை கண்டுபிடிப்பது CSK-வுக்கு முக்கியமானதாக இருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஒரு பெரிய டிரேடு மூலம் சஞ்சு சென்னைக்கு வந்தது இந்த நோக்கத்தில்தான் என்று கூறப்படுகிறது. 2026 டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு மீது அதிக அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை என்றும் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

சிஎஸ்கேவின் எதிர்கால கட்டமைப்பு

ரவீந்திர ஜடேஜா, சாம் கரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய வீரர்கள் பரிமாற்றத்தின் மூலம்தான் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வந்துள்ளார். சிஎஸ்கே அணியின் புதிய முதுகெலும்பாக சஞ்சு மாறுவாரா என்பதை கிரிக்கெட் உலகம் உற்று நோக்குகிறது. ஏனெனில் சென்னை அணிக்கு ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த தோனிக்கு மாற்று வீரராக இருப்பது எந்த ஒரு வீரருக்கும் சவாலானதுதான். ஆனால், தோனி இல்லாத நிலையில் சஞ்சுவுக்கு கிடைக்கும் இந்த முதல் வாய்ப்பு, அணியின் எதிர்கால கட்டமைப்பை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். ஆக மொத்தத்தில் தோனி இல்லாத சிஎஸ்கே அணி ஐபிஎல் 2026 தொடரில் சாதிக்குமா? இல்லை சறுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories