ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் நட்சத்திர வீரராக திகழும் தீபக் சாஹர் 63 போட்டிகளில் ஆடி 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிஎஸ்கே அணிக்காக பவர்ப்ளேயில் அருமையாக பந்துவீசி தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கும் பணியை செவ்வனே செய்துவந்த தீபக் சாஹரை, 15வது சீசனுக்கான மெகா ஏலத்தில் ரூ.14 கோடி என்ற பெரும் தொகையை கொடுத்து ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே அணி.