IPL2022: சிஎஸ்கே இந்த சீசனில் மரண அடி வாங்கியதும் நல்லதுக்குத்தான் - ஸ்டீஃபன் ஃப்ளெமிங்

Published : May 21, 2022, 03:16 PM IST

ஐபிஎல் 15வது சீசனில் பிளே ஆஃபிற்கு கூட முன்னேறாமல் சிஎஸ்கே அணி லீக் சுற்றுடன் வெளியேறியது, அடுத்த சீசனுக்கான வினையூக்கியாக அமையும் என்று சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் கூறியுள்ளார்.  

PREV
16
IPL2022: சிஎஸ்கே இந்த சீசனில் மரண அடி வாங்கியதும் நல்லதுக்குத்தான் - ஸ்டீஃபன் ஃப்ளெமிங்

ஐபிஎல் 15வது சீசன் சிஎஸ்கே அணிக்கு சரியாக அமையவில்லை. 4 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி இந்த சீசனில் பிளே ஆஃபிற்குக்கூட தகுதிபெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த சீசனில் 14 லீக் போட்டிகளில் ஆடி வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றதால் பிளே ஆஃபிற்கு முன்னேற முடியவில்லை.
 

26

ஐபில்லில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, அடுத்த சீசனில் முழு பலத்துடன் திரும்பி 2021 ஐபிஎல்லில் கோப்பையை வென்றது. அதுபோல அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி கோப்பையை தூக்குவதற்கான வாய்ப்பு கூட உள்ளது.

36

அதற்கு காரணம், இந்த சீசனில் சில திறமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தீபக் சாஹர் இல்லாத குறையை, பவர்ப்ளேயில் அருமையாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி தீர்த்துவைத்தார் இடது கை ஃபாஸ்ட் பவுலர் முகேஷ் சௌத்ரி. அவருடன் இணைந்து மற்றொரு இளம் ஃபாஸ்ட் பவுலரான சிமர்ஜீத் சிங்கும் அருமையாக பந்துவீசினார். எனவே அடுத்த சீசனில் தீபக் சாஹருடன் இவர்களும் இணையும்போது, சிஎஸ்கே அணி கூடுதல் பலம்பெறும்.
 

46

பேட்டிங்கில் ருதுராஜ், மொயின் அலி ஆகியோருடன் டெவான் கான்வேவும் நம்பிக்கையளிக்கிறார். எனவே இந்த சீசன் சரியாக தொடங்காத காரணத்தால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்திருந்தாலும், அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியால் கோப்பையை வெல்ல முடியும் என தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் நம்புகிறார்.
 

56

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் தோற்றபின் இதுகுறித்து பேசிய ஸ்டீஃபன் ஃப்ளெமிங், ஒரு புதிய சுழற்சியை தொடங்கும்போது, பல புதிய வீரர்கள் அணியில் இருப்பது ஒரு டெஸ்ட்டிங் தான். நாங்கள் இந்த சீசனில் வெற்றிகரமாக இருக்கவில்லை. புதிய வீரர்களை பற்றிபுரிந்துகொள்ள சிறிது நேரம் எடுக்கும். 
 

66

இந்த சீசனின் தொடக்கத்தில் குறைந்தபட்சம் 2 வீரர்கள் கூட ஃபார்மில் இல்லாமல் இருந்ததுதான் சிஎஸ்கே அணியின் பிரச்னையாக இருந்தது. 2 வெற்றிகள் கிடைத்ததற்கு பின்னர், சரியான டிராக்கிற்கு வந்ததற்கான அறிகுறிகள் இருந்தன. அதனால் சீனியர் வீரர்களிடமிருந்து சரியான ஆலோசனைகளை பெற்று இளம் வீரர்களும் நம்பிக்கை பெற்றனர். இதுதான் சுழற்சி. நாங்கள் ஆடியதை விட இன்னும் சிறப்பாக ஆடுவதற்கான வாய்ப்புகள் இருந்தன என்பது உண்மை. ஆனால் இந்த சீசனில் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை என்பதுதான் நிதர்சனம். இது அடுத்த சீசனுக்கான வினையூக்கியாக அமையும் என்று ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories