MI vs DC: MI கையில் RCB-யின் குடுமி! மும்பை அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம்! இரு அணிகளின் உத்தேச ஆடும் 11

First Published May 21, 2022, 2:35 PM IST

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் படுமோசமாக விளையாடி முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. 
 

இன்று மும்பை அணி அதன் கடைசி லீக் போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது. இதுதான் டெல்லி அணிக்கும் கடைசி போட்டி. மும்பை அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டதால் இந்த போட்டியில் மும்பை அணிக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் டெல்லி அணிக்கு இது முக்கியமான போட்டி. இந்த போட்டியில் ஜெயித்தால்தான் டெல்லி அணி பிளே ஆஃபிற்கு முன்னேறமுடியும்.
 

எனவே இது டெல்லி அணிக்குத்தான் முக்கியமான போட்டி. அதனால் டெல்லி அணி வெற்றி வேட்கையுடன் இறங்கும். டெல்லி தோற்றால் பிளே ஆஃப் வாய்ப்பை பெறும் ஆர்சிபி அணி, மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என நினைக்கும். இந்த போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் ஆர்சிபி பிளே ஆஃபிற்கு முன்னேறும். டெல்லி அணி வென்றால் டெல்லி அணி முன்னேறும். 

மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகனும் இடது கை ஃபாஸ்ட் பவுலருமான அர்ஜுன் டெண்டுல்கர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2சீசன்களாக மும்பை அணியில் இடம்பெற்றுள்ள அர்ஜுன் டெண்டுல்கருக்கு இதுவரை ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வலையில் அருமையாக பந்துவீசிவரும் அவர் இன்றைய போட்டியில் மும்பை அணியில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
 

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டிரால்ட் பிரெவிஸ், திலக் வர்மா, டிரிஸ்டான் ஸ்டப்ஸ், டிம் டேவ்ட், ரமன் தீப் சிங், அர்ஜுன் டெண்டுல்கர், குமார் கார்த்திகேயா, ஜஸ்ப்ரித் பும்ரா, ரிலே மெரிடித்.
 

உத்தேச டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர், சர்ஃபராஸ் கான், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அன்ரிக் நோர்க்யா, கலீல் அகமது.
 

click me!