IPL 2023: டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு கேப்டன்கள் நியமனம்! 2 பேருமே வெளிநாட்டு கேப்டன்கள்

First Published | Feb 23, 2023, 2:26 PM IST

ஐபிஎல் 16வது சீசனுக்கான டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கான புதிய கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
 

ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 16வது சீசன் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது. இந்த சீசனுக்கான ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் நடத்தப்பட்டது. 

ஐபிஎல் 16வது சீசன் நெருங்கிவிட்ட நிலையில், அதற்கான அனைத்து அணிகளும் கேப்டன் தலைமையில் தயாராக உள்ளன. டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு மட்டுமே கேப்டன்கள் உறுதியாகாமல் இருந்தனர்.


பென்ச்சில் உட்கார வைப்பதற்கு ஏன் அவரை இந்தியாவிற்கு கூட்டிட்டு போனீங்க! ஆஸி., அணி தேர்வை விளாசிய கில்கிறிஸ்ட்

Tap to resize

டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று ஓய்வில் இருக்கிறார். அவர் முழு ஃபிட்னெஸ் பெற இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அவர் இந்த ஐபிஎல்லில் ஆடமாட்டார். அதனால்  அந்த அணி கேப்டன் இல்லாமல் இருந்தது.
 

அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனை ஏலத்திற்கு முன் விடுவித்ததால் அந்த அணிக்கும் கேப்டன் இல்லாமல் இருந்தது.
ஃபாஸ்ட் பவுலர் கேப்டனாக இருந்தால் பெரிய பிரச்னை..! பாட் கம்மின்ஸின் கேப்டன்சியை விளாசிய ஆலன் பார்டர்

இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய சீனியர் வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லில் மிகுந்த அனுபவம் வாய்ந்த டேவிட் வார்னர், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாகவும் செயல்பட்ட அனுபவம் கொண்டவர். அந்த அணிக்கு 2016ல் ஐபிஎல் கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார்.
 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

Latest Videos

click me!