ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் நன்றாக ஆடிவரும் சிஎஸ்கே அணி, முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் கடுமையாக போராடி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜோஸ் பட்லரின் அதிரடி அரைசதம்(52) மற்றும் தேவ்தத் படிக்கல்(38), அஷ்வின் (30), ஹெட்மயர்(30) ஆகியோரின் பங்களிப்பால் 20 ஓவரில் 175 ரன்கல் அடித்தது.
176 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் தோனி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் கடைசியில் சிக்ஸர்களாக விளாசி கடுமையாக போராடிய போதிலும் 20 ஓவரில் 172 ரன்கள் அடித்து 3 ரன் வித்தியாசத்தில் தோற்றது. தனது 200வது ஐபிஎல் போட்டியான இந்த போட்டியில் 17 பந்தில் 32 ரன்களை விளாசினார் தோனி.
இந்நிலையில், தோனி குறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங், தோனி முழங்கால் காயத்துக்கு சிகிச்சை பெற்றுவருகிறார். அவரது சில அசைவுகளில் முழங்கால் காயத்தால் அவர் கஷ்டப்படுவது தெரியும். ஆனால் தொழில்முறை கிரிக்கெட்டுக்கான நல்ல ஃபிட்னெஸை பெற்றிருப்பதால் தான் அவரால் ஆடமுடிகிறது. சிசாண்டா மகாளாவும் காயத்தால் 2 வாரத்திற்கு ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார் என்று ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.