ஜோஸ் பட்லர்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான 17ஆவது போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பந்து வீச்சு தேர்வு செய்தார்.
சந்தீப் சர்மா
அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் 38 ரன்னும், ரவிச்சந்திரன் 30 ரன்னும், ஷிம்ரான் ஹெட்மையர் 30 ரன் (நாட் அவுட்) எடுக்க 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆணி 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்துள்ளது.
சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ்
இதையடுத்து பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். டெவான் கான்வே 50 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அஜிங்க்யா ரஹானே 31 ரன்னில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ்
அடுத்து வந்த ஷிவம் துபே, மொயீன் அலி, இம்பேக்ட் பிளேயர் அம்பதி ராயுடு ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக வந்த தல தோனி 200ஆவது போட்டியில் களமிறங்கினார். எனினும், 16ஆவது ஓவரில் களமிறங்கிய தோனி, 17.1 ஆவது ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். 4ஆவது பந்தில் சிக்ஸர் பறக்க விட்டார்.
ரவீந்திர ஜடேஜா
இதே போன்று ரவீந்திர ஜடேஜாவும் தன் பங்கிற்கு பவுண்டரியும், சிக்ஸரும் விளாசினார். 19ஆவது ஓவரில் மட்டும் 19 ரன்கள் எடுக்கப்பட்டது. இறுதியாக, கடைசி ஒவரில் சிஎஸ்கே அணிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை சந்தீப் சர்மா வீசினார். அந்த ஓவரில் முதல் பந்தில் வைடு கொடுக்கப்பட்டது. 2ஆவது பந்தில் தோனி சிக்ஸர் விளாசினார். 3ஆவது பந்திலும் தோனில் சிக்ஸர் விளாசினார்
எம் எஸ் தோனி
இதையடுத்து சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி 3 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது, 4ஆவது பந்தில் தோனி ஒரு ரன் எடுக்க, 5ஆவது பந்தில் ஜடேஜா ஒரு ரன் எடுத்தார். இதையடுத்து கடைசி பந்தில் சிஎஸ்கே வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தோனி தான் பேட்டிங் ஆடினார். கடைசி பந்தில் வின்னிஷ் ஷாட் சிக்ஸர் அடித்தால் சிஎஸ்கே அணி வெற்றி பெறும்.
த்ரிஷா, சதீஷ்,
ஆனால், கடைசி பந்தில் தோனி சிக்ஸர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சிக்ஸர் அடிக்கவில்லை. மாறாக, ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதன் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர் ஆர் வெற்றி
இதற்கு முன்னதாக சிஎஸ்கேவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி,
அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு 23 ரன்களில் தோல்வி அடைந்தது.
2011 ஆம் ஆண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
2012 ஆம் ஆண்டு 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி
2013 ஆம் ஆண்டு 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
2015 ஆம் ஆண்டு 12 ரன்களில் தோல்வி அடைந்தது.
2019 ஆம் ஆண்டு 8 ரன்களில் தோல்வி அடைந்தது.
2023 ஆம் ஆண்டு 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.