#IPL2021 என்ன தல நீங்களே இப்படி பண்ணலாமா..? கோலியே தப்பிச்சுட்டாரு.. நீங்க சிக்கிட்டீங்களே..!

First Published Apr 11, 2021, 2:02 PM IST

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில், பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 

ஐபிஎல்லில் அணிகள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்வது பெரிய பிரச்னையாக இருந்துவந்தது. இந்த சீசனில் அதை முறைப்படுத்தும் வகையில், கடுமையான விதிகளை அமல்படுத்தியது பிசிசிஐ. ஒரு போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டால் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்படும், மீண்டும் அதே தவறை செய்தால் கேப்டனுக்கு ரூ.24 லட்சம் அபராதம், 3வது முறையாக செய்தால் ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்படும் என்று விதி கடுமையாக்கப்பட்டது.
undefined
பொதுவாக ஆர்சிபி கேப்டன் கோலி தான் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொள்வார். அதை பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால் விதி கடுமையாக்கப்பட்ட பிறகு, முதல் கேப்டனாக இம்முறை தோனி சிக்கியுள்ளார். டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது.
undefined
டெல்லி கேபிடள்ஸுக்கு எதிராக மும்பை வான்கடேவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவரில்; 188 ரன்கள் அடித்தது. 189 ரன்கள் என்ற இலக்கை, ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷாவின் அதிரடியான பேட்டிங்கால் 19வது ஓவரிலேயே எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.
undefined
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி பந்துவீச ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது. இதையடுத்து சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
undefined
click me!