டுவின்ஸ் மாதிரியே இருக்கும் ரவிச்சின் ரவீந்திரா – ஆண்ட்ரே சித்தார்த்; மாற்று தாயின் சகோதரர்கள்!

Rachin Ravindra and Andre Siddarth Looks Twin Brothers in CSK : சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள ரச்சின் ரவீந்திர மற்றும் ஆண்ட்ரே சித்தார்த் இருவரும் இரட்டை சகோதரர்கள் என்று சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர்.

CSK Players Rachin Ravindra and Andre Siddarth Looks like a Twin Brothers in Tamil rsk

Rachin Ravindra and Andre Siddarth Looks Twin Brothers in CSK : ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரச்சின் ரவீந்திரா மற்றும் ஆண்ட்ரே சித்தார்த் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவின் மற்றொரு தாயின் சகோதரர் என்று ஆண்ட்ரே சித்தார்த்தை அழைக்கிறார்கள். இதற்கு காரணம் இருவரும் அச்சு அசல் ஒரே மாதிரியாக இருப்பது தான்.

CSK Players Rachin Ravindra and Andre Siddarth Looks like a Twin Brothers in Tamil rsk
CSK 2025 Squad, Chennai Super Kings

யார் இந்த ஆண்ட்ரே சித்தார்த்?

தமிழ்நாடு அணியின் வீரர் எஸ் சரத்தின் மருமகனான 18 வயதான இவர் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டிஎன்பிஎல்) விளையாடியுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் அறிமுகமானார். ஆனால் இன்னும் சர்வதேச டி20 போட்டியில் விளையாடவில்லை. இருப்பினும், ஆண்ட்ரே ரஞ்சி கோப்பையின்போது மறக்கத்தக்க வெற்றிக் கதையாக இருந்தார்.

ஒரு டிக்கெட் ரூ.20 ஆயிரமா? ஐபிஎல் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்ற கும்பல் கைது!
 


C Andre Siddarth and Rachin Ravindra Twins

தமிழகத்திற்காக 12 இன்னிங்ஸ்களில் 612 ரன்கள் எடுத்து 68.00 சராசரியுடன் ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் அடித்தார். இந்த இளைஞன் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் தனது முத்திரையை பதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தமிழக வீரரான ஆண்ட்ரே சித்தார்த்தை சிஎஸ்கே அணியானது ரூ.30 லட்சம் அடிப்படை விலைக்கு ஏலத்தில் எடுத்தது.

IPL : KKR vs RCB ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

Chepauk Stadium, Anirudh, CSK vs MI, Chennai Super Kings vs Mumbai Indians

கடந்த 1991 – 92 ஆம் ஆண்டுகளில் தமிநாடு அணியானது சாம்பியன் பட்டத்தை வென்ற போது ஆண்ட்ரே சித்தார்த்தின் மாமா சரத் 19 வயதுக்குட்ப்பட்ட அணியின் ஒரு பகுதியாக இருந்தார். தற்போது தேசிய தேர்வாளராக இருக்கும் சரத் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் 90000 ரன்கள எடுத்துள்ளார்.

IPL: CSK vs MI டிக்கெட் கள்ளச் சந்தையில் விற்பனை! கல்லுரி மாணவரை தட்டித்தூக்கிய போலீஸ்!

Asianet News Tamil, Sports News Tamil, T20

ரச்சின் ரவீந்திரா:

இவரைப் பற்றிய அறிமுகம் யாருக்கும் தேவையில்லை. ஏனென்றால், ரச்சின் ரவீந்திரா ஏற்கனவே கடந்த ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று விளையாடியதை கண்டு நியூசிலாந்து தங்களது அணியில் அவரை தக்க வைத்துக் கொண்டது. சிறந்த ஆல்ரவுண்ட்ரான ரச்சின் ரவீந்திரா 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 578 ரன்கள் எடுத்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

Chennai Super Kings, C Andre Siddarth, Andre Siddarth, Cricket

கடந்த சீசனில் ரூ.1.8 கோடிக்கு சிஎஸ்கே அணியில் இடம் பெற்று விளையாடிய ரச்சின் ரவீந்திரா 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ரூ.4 கோடிக்கு சிஎஸ்கே அவரை ஏலம் எடுத்தது. அதுவும், ரைட்-டு-மேட்ச் (ஆர்டிஎம்) கார்டைப் பயன்படுத்தி அவரை வாங்கியது. 2025 சாம்பியன்ஸ் டிராபியில் 4 போட்டிகளில் விளாயாடிய ரச்சின் முறையே 112, 6, 108 மற்றும் 37 என்கள் என்று மொத்தமாக 263 ரன்களுடன் சிறப்பாக செயல்பட்டார்.

Rachin Ravindra, Twins, IPL 2025, CSK

ரச்சின் ரவீந்திரா மற்றும் சி ஆண்ட்ரே சித்தார்த் இருவரும் டுவின்ஸ்:

ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதங்களில் வைரலான நிலையில், அவர்களை டுவின்ஸ் சகோதரர்கள் என்று அழைக்கிறார்கள். ரச்சின் ரவீந்திராவின் மற்றொரு தாயின் சகோதரர் என்று ஆண்ட்ரே சித்தார்த்தை குறிப்பிடுகின்றனர். சித்தார் மற்றும் ரவீந்திரா இருவருமே பேட்ஸ்மேன்கள் தான், என்றாலும் ரச்சின் ரவீந்திரா ஆல்ரவுண்டராக ஜொலிக்கிறார்.

Rachin Ravindra and Andre Siddarth Twins

நாளை மார்ச் 23 ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரின் 3ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6.30 மணி முதல் 6.50 மணி வரையில் அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.

Latest Videos

vuukle one pixel image
click me!