CSK vs MI போட்டியில் தெறிக்கவிட போகும் அனிருத் இசை; தோனியே கண்டு ரசிக்க போகிறார்!

Anirudh Music in CSK vs MI Match at Chepauk Stadium : சென்னையில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025 தொடரின் 3ஆவது லீக் போட்டிக்கு முன்னதாக அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CSK vs MI match: Anirudh's concert! Fans are excited in Tamil rsk

CSK vs MI Match Day: Anirudh's Live Music Event : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா நாளை 22 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கும் ஐபிஎல் திருவிழாவின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக ஷ்ரேயா கோஷல், கரண் அவுஜ்லா மற்றும் திஷா பதானியின் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

CSK vs MI match: Anirudh's concert! Fans are excited in Tamil rsk
Anirudh Ravichander, T20, Cricket News Tamil, Sports News Tamil

CSK vs MI: போட்டியில் அனிருத் இசை:

மேலும், 13 இடங்களிலும் தொடக்க விழா நடக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் இப்போது புதிதாக சென்னையில் நடைபெறும் போட்டிக்கு முன்னதாக அனிருத் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் கோட்டையாக விளங்கும் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் வரும் 23ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 3ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது.


CSK vs MI Predictions, IPL 2025 Player Stats

இந்தப் போட்டிக்கு முன்னதாக இசையமைப்பாளரான அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மாலை 6.30 மணி முதல் 6.50 மணி வரையில் கிட்டத்தட்ட 20 நிமிடம் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியை தோனியே கண்டு ரசிக்க போகிறார். இதற்கு முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அனிருத் மற்றும் தோனி இருவரும் கலந்து கொண்டனர். அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் பேசினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

IPL 2025 Schedule, CSK vs MI Head to Head

CSK vs MI: நேருக்கு நேர்:

இதுவரையில் சிஎஸ்கே மற்றும் எம்ஐ அணிகள் தலா 38 முறை ஐபிஎல் தொடரில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் 17 முறையும், மும்பை இந்தியன்ஸ் அணி 21 முறையும் வெற்றி பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி மும்பையின் கோட்டையான வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 7-4 என்று முன்னிலை பெற்றுள்ளது. அதே போன்று தான் சென்னையின் கோட்டை என்று சொல்லப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் 6-3 என்று முன்னிலை பெற்றுள்ளது.

MS Dhoni, Rohit Sharma, Hardik Pandya, Ruturaj Gaikwad

அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய எம்.எஸ்.தோனி:

இதுவே பொதுவான மைதானங்களில் நடைபெற்ற போட்டிகளில் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 9-8 என்று முன்னிலை பெற்றிருக்கிறது. இதுவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான எம்.எஸ்.தோனி மட்டுமே ஐபிஎல் தொடர்களில் 264 போட்டிகளில் விளையாடி அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். 2ஆவது இடத்தில் ரோகித் சர்மாவும் (257), 3ஆவது இடத்தில் விராட் கோலியும் (252) இடம் பெற்றுள்ளனர்.

CSK vs MI Anirudh Music at Chepauk Stadium

5 முறை ஐபிஎல் டிராபி வென்ற அணிகள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இரு அணிகளும் தலா 5 முறை டிராபியை வென்று பலமான அணியாக ஐபிஎல் தொடரில் களம் காணுகின்றன. இரு அணிகளுமே பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் வலிமையான அணிகளாக திகழ்கின்றன.

CSK vs MI Match Highlights, IPL 2025, IPL 2025 Live Streaming

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), டெவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், வன்ஷி பேடி, ஆண்ட்ரே சித்தார்த், ரச்சின் ரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், சாம் கரண், விஜய் சங்கர், அன்ஷுல் கம்போஜ், தீபக் கூடா, ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ், ஷிவம் துபே, கலீல் அகமது, நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, குர்ஜாப்னீத் சிங், நேதன் எல்லீஸ், ஷ்ரேயாஸ் கோபா, மதீஷா பதிரனா.

Chennai Super Kings, Mumbai Indians, CSK vs MI Match

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்:

ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், ரியான் ரிக்கல்டன், ஸ்ரீஜித் கிருஷ்ணன், பெவோன் ஜாகோப்ஸ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் திர், வில் ஜாக்ஸ், மிட்செல் சாண்ட்னர், ராஜ் அங்கத் பவா, விக்னேஷ் புதுர், கார்பின் போஸ், டிரெண்ட் போல்ட், கரண் சர்மா, தீபக் சாஹர், அஸ்வினி குமார், ரீஸ் டாப்ளி, சத்யநாராயணா பென்மெட்சா, அர்ஜூன் டெண்டுல்கர், முஜிப் உர் ரஹ்மான், ஜஸ்ப்ரித் பும்ரா.

Latest Videos

vuukle one pixel image
click me!