ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் சென்னையில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. சிஎஸ்கே அணி ஆஸி.,யின் அதிரடி ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் மீது ஆர்வம் காட்டியது. மேக்ஸ்வெல்லுக்காக ஆர்சிபி அணியும் போட்டியிட்டதால், விலை ஏறிக்கொண்டே சென்றதால் சிஎஸ்கே பின்வாங்கியது. ஆர்சிபி மேக்ஸ்வெல்லை ரூ.14.25 கோடிக்கு எடுத்தது.
எப்போதுமே மிகச்சில வீரர்களை மட்டுமே டார்கெட் செய்து தெளிவான ஐடியாவுடன் ஏலத்திற்கு வரும் சிஎஸ்கே அணி, மேக்ஸ்வெல்லை எடுக்க முடியவில்லை என்றாலும், தங்கள் மனதில் இருந்த மற்றொரு வீரரை எடுத்துவிட்டது.
சிஎஸ்கே அணி தரமான ஸ்பின் ஆல்ரவுண்டர் மீது ஆர்வம் காட்டும்; அந்தவகையில், மொயின் அலியை ஏலத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோலவே, மொயின் அலியை ரூ.7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே. மொயின் அலிக்காக பஞ்சாப் கிங்ஸ் அணியும் போட்டியிட்ட நிலையில் ஒருகட்டத்திற்கு மேல் பஞ்சாப் கிங்ஸ் ஒதுங்கியது. ஸ்பின்னிற்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொயின் அலி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரராக இருப்பார் என்பதால் அவரை ரூ.7 கோடிக்கு எடுத்தது சிஎஸ்கே.
கேகேஆர் அணி தங்கள் பழைய வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான வங்கதேச வீரரான ஷகிப் அல் ஹசனை ரூ.3.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.