CSK MS Dhoni: 'தல' தோனியின் இடத்தை நிரப்பப் போகும் 5 வீரர்கள்! லிஸ்ட் இதோ!

Published : Aug 12, 2025, 10:37 PM IST

சிஎஸ்கேவில் தல தோனியின் இடத்தை நிரப்பப் போகும் அந்த 5 விக்கெட் கீப்பர்கள் யார்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

PREV
16
List of 5 Players Who Will Replace CSK MS Dhoni

சிஎஸ்கே அணியின் எம்.எஸ். தோனி ஐபிஎல் 2026 சீசனில் விளையாடுவாரா? இல்லை ஓய்வு பெறுவாரா? என்பது மதில் மேல் பூனையாக உள்ளது. ஒருவேளை தல தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடாமல் போனால் அவரது இடத்தை நிரப்பப்போகும் 5 விக்கெட் கீப்பர்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

26
சஞ்சு சாம்சன்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், தோனிக்குப் பின் சிஎஸ்கே அணியின் கேப்டனாக வருவார் என்று பேசப்படுகிறது. அவரை டிரேட் செய்ய சிஎஸ்கே நிர்வாகம் ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. சிறந்த விக்கெட் கீப்பிங் மற்றும் சிறப்பான பேட்டிங் திறன் கொண்ட சாம்சன், தோனிக்குப் பின் சிஎஸ்கேவை வழிநடத்த சரியானவர் என்று கருதப்படுகிறது.

சஞ்சு சாம்சனும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட்டு வெளியேற சாம்சன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவரிடமிருந்தோ அல்லது அணி நிர்வாகத்திடமிருந்தோ அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வரவில்லை. சஞ்சு சாம்சன் சிஎஸ்கேவுக்கு டிரேட் செய்யப்பட்டால், தோனியின் இடத்தை நிரப்ப அவர் 100% தகுதியானவர்.

36
உர்வில் படேல்

குஜராத் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் உர்வில் படேல், ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஓரளவு சிறப்பாக விளையாடினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக முறையே அதிரடியாக 31 மற்றும் 37 ரன்கள் எடுத்தார். உர்வில் படேல் கடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கேவில் சேர்க்கப்பட்டபோது, ​​அவர் தோனிக்கு மாற்றாக இருப்பார் என்று பலர் நினைத்தனர்.

கடந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபி சீசனில் ஆறு போட்டிகளில் 78.75 சராசரியுடன் 315 ரன்கள் குவித்தார். அடுத்த ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்துக்கு முன்னதாக சிஎஸ்கே உர்வில் படேலை தக்கவைத்துக் கொண்டால், தோனி ஓய்வு பெற்ற பிறகு அவருக்குப் பதிலாக படேல் விளையாடலாம்.

46
ரஹ்மனுல்லா குர்பாஸ்

ரஹ்மனுல்லா குர்பாஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் அந்த அணி குயின்டன் டி காக்கை விக்கெட் கீப்பராக ஐபிஎல் மினி ஏலத்துக்கு முன்னதாக தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. குர்பாஸ் விடுவிக்கப்பட்டால் சிஎஸ்கே அவரை வாங்க வாய்ப்புள்ளது. 

அதிரடி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்படும் குர்பாஸ் நல்ல தேர்வாக இருப்பார். 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் இரண்டு சீசன்களிலும் 8 போட்டிகளில் மட்டுமே விளையாடிய குர்பாஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 136 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

56
இஷான் கிஷன்

தோனியின் ஊரை (ஜார்க்கண்ட்) சேர்ந்த இஷான் கிஷன் சிஎஸ்கேவில் தோனியின் இடத்தை நிரப்பக்கூடிய தரமான ஒரு வீரர். இஷான் கிஷன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 11.25 கோடிக்கு வாங்கப்பட்டார். 14 போட்டிகளில் 35.40 சராசரியுடன் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட 354 ரன்கள் எடுத்தார். 

அவரது ஆட்டம் எதிர்பார்த்தபடி இல்லாததால் ஹைதராபாத் அணி அவரை ஏலப்பட்டியலில் விடுவிக்கலாம் அல்லது டிரேட் செய்யலாம். இதன்பின்பு சிஎஸ்கே இஷான் கிஷானை வாங்கினால், அவரது அதிரடி பேட்டிங் மற்றும் கூர்மையான விக்கெட் கீப்பிங் திறன்கள் தோனியால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பு வாய்ப்புள்ளது.

66
நாராயணன் ஜெகதீசன்

சிஎஸ்கேவில் தோனிக்குப் பதிலாக விளையாடக்கூடிய ஒரு சாத்தியமான வீரர் நாராயணன் ஜெகதீசன். தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜெகதீசன், 2020/21 முதல் 2022 வரை சிஎஸ்கேவுக்காக இரண்டு சீசன்களில் விளையாடினார். பின்னர் 2023ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குச் சென்றார். இருப்பினும், ஐபிஎல் போட்டிகளில் அவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மூன்று சீசன்களில் 13 போட்டிகளில் 18 சராசரியுடன் 162 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இருந்தாலும் சிஎஸ்கே ஜெகதீசனை மீண்டும் அணிக்குள் கொண்டு வரலாம். அவர் சென்னை பிட்ச்சின் சூழலை நன்கு அறிந்தவர். மேலும், டிஎன்பிஎல் உள்ளிட்ட உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆகவே ஜெகதீசன் தோனிக்கு மாற்று வீரராக அமைய அதிக வாய்ப்புள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories